twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இப்போது தமிழகத்தில் நடக்கும் அவலம்தான் 'சட்டப்படி குற்றம்'!- எஸ்.ஏ.சந்திரசேகரன்

    By Shankar
    |

    தமிழகத்தில் நடக்கும் அவலங்களை மையமாகக் கொண்டு எடுக்கம்படும் படம்தான் சட்டப்படி குற்றம், என்றார் இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகரன்.

    நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன், 'சட்டப்படி குற்றம்' என்ற புதிய படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி வருகிறார்.

    சீமான் மற்றும் சத்யராஜ் நடித்துள்ளனர். இந்தப் படம், இம்மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

    இதுகுறித்து நிருபர்களுக்கு சென்னையில் நேற்று மாலை எஸ் ஏ சந்திரசேகர் அளித்த பேட்டி:

    இன்றைக்கு நாட்டில் நடைபெறுகிற சில விஷயங்களை மனதில் வைத்து, இந்த படத்தில் காட்சிகளை அமைத்து இருக்கிறேன். சமூக அவலங்கள், மதவாதிகளின் அட்டூழியங்கள், அரசியலில் நடக்கும் கேவலங்கள் ஆகியவைதான் இந்தப் படத்தின் கரு.

    இதனால் இந்தப் படம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவானது என நினைத்துவிட வேண்டாம். நான் பொதுவானவன். யாருக்கும் ஆதரவாக படம் எடுக்கவில்லை. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, சட்ட நகலை எரித்ததற்காக கலைஞரை கைது செய்தார்கள். அதற்கு எதிராகத்தான் 'நீதிக்கு தண்டனை' படத்தை எடுத்தேன்.

    அதேபோல்தான் இன்று நாட்டில் நடக்கும் அவலங்களைத் தோலுரித்துக் காட்டும் வகையில் 'சட்டப்படி குற்றம்' படத்தை எடுக்கிறேன், ' என்றார்.

    English summary
    Director S A Chandrasekar met the press yesterday for his forthcoming movie Sattappadi Kutram. Starring Seeman and Sathyaraj in key roles, the film, according to the director, is not against the ruling DMK party.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X