போனி வர்மா சினேகிதிதான்-சொல்கிறார் பிரகாஷ் ராஜ்

நடிகர் பிரகாஷ்ராஜ், 15 வருடங்களுக்கு முன்பு டிஸ்கோ சாந்தியின் தங்கை நடிகை லலிதகுமாரியை பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்தார். இருவருக்கும் 2 மகள்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், இரண்டு பேருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. லலிதகுமாரியை, பிரகாஷ்ராஜ் விவாகரத்து செய்தார்.
அவரும், மும்பையைச் சேர்ந்த டான்ஸ் மாஸ்டர் போனிவர்மாவும் காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், பிரகாஷ்ராஜ் சொந்தமாக தயாரித்துள்ள 'இனிது இனிது' என்ற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. பாடல்களை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் வெளியிட, நடிகர்- இயக்குநர் பிரபுதேவா பெற்றுக்கொண்டார்.
முன்னதாக, பிரகாஷ்ராஜ் சென்னை போர்ஃபிரேம் தியேட்டரில் 'சினிமா செய்தியாளர்'களைச் சந்தித்தார். அப்போது போனிவர்மாவை அழைத்து தன் பக்கத்தில் நிறுத்திக்கொண்டார்.
ஜஸ்ட் சினேகிதி!
"இவர்தான் போனிவர்மா. ஜஸ்ட் என் சினேகிதி'' என்று நிருபர்களுக்கு போனிவர்மாவை அறிமுகம் செய்துவைத்தார்.
"இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக பேசப்படுகிறதே?'' என்ற கேள்வியை தவிர்த்துவிட்டு, 'இனிது இனிது' படத்தை பற்றி மட்டும் பேசினார்.
போனிவர்மாவிடம், "உங்களுக்கும், பிரகாஷ்ராஜூக்கும் எப்போது திருமணம்?" என்று நிருபர்கள் கேட்டபோது, "இப்போது இனிது இனிது படத்தைப் பத்தி மட்டும் பேசுங்க. அதுக்குதானே வந்திருக்கீங்க... இந்தப் படத்தில் நான் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளேன். அதற்காகத்தான் வந்தேன்'' என்று மட்டும் பதில் சொல்லிவிட்டு, காரில் ஏறிச் சென்று விட்டார்.


Click it and Unblock the Notifications











