ராக்கியின் ஆதாம்-ஏவாள் திட்டம்!

By Staff

Rakhi Sawant
ராக்கி சாவந்த்தின் 'ராக்' பேச்சு தொடர்ந்து கொண்டுள்ளது. சமீபத்தில் சென்சார் போர்டை போட்டு வாங்கினார். தற்போது அடுத்த அதிரடிக்குத் தயாராகி விட்டார்.

இப்போது ராக்கி போகப் போவது புதிய பாதை. இந்த மாதத்தில் அவர் வயோதிகத்தைத் தவிர்க்க உதவும் புதிய வகை காஸ்மெட்டிக் பொருளை விற்பனைக்கு இறக்குகிறார். இது இவரது சொந்தத் தயாரிப்பாம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த காஸ்மெட்டிக் பொருள் விற்பனைக்கு வந்த பின்னர் வயோதிகத்தை மறைக்க போட்டாக்ஸ் ஊசிகளைப் போடுவதற்கும், முகத்தை பல்வேறு பூச்சுக்களால் மறைக்கவும் அவசியம் இருக்காது.

முதலில் இதை நான் பயன்படுத்தி எப்படி செயல்படுகிறது என்று பார்க்க விரும்பினேன். அதை தயாரிப்பு நிறுவனத்திடமும் தெரிவித்தேன்.

நான் மற்றவர்களைப் போல கிடையாது. பொய் சொல்லி சரக்கை விற்க விரும்ப மாட்டேன். இன்றைக்கு சினிமாத் துறையில் பல்வேறு நட்சத்திரங்களும் என்டோர்ஸ் செய்யும் பொருட்களை உண்மையில் யாருமே பயன்படுத்துவதில்லை. ஆனால் நான் பணத்திற்காக மக்களை முட்டாளாக்க மாட்டேன். அப்படிச் செய்தால் நான் வணங்கும் இயேசு நாதர் என்னை சும்மா விட மாட்டார் என்றார் ராக்கி.

இதுதவிர அழகு சாதன நிலையம் ஒன்றையும், சொந்தமாக ரெக்கார்டிங் ஸ்டுடியோவையும் தொடங்குகிறார் ராக்கி. அதை விட முக்கியமாக பைபிள் குறித்த டிவி சீரியல் ஒன்றையும் தயாரிக்கப் போகிறாராம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த தொடரை மூன்று முதல் நான்கு இயக்குநர்கள் இயக்குவார்கள். இதுவரை யாரும் பார்த்திராத வகையில் மிகவும் பிரமிப்பான தொடராக இது அமையும்.

இந்தத் தொடரில் மேரி மாதா கேரக்டரில் நானே நடிக்கலாம் என திட்டமிட்டிருந்தேன். ஆனால் எனது பாஸ்டர்கள் என்னை மேரி மெகதலீன் கேரக்டரில் நடிக்குமாறு அறிவுறுத்தியதால் அந்த கேரக்டரில் நடிக்கப் போகிறேன்.

இதுதவிர மோசஸ், நோவா குறித்த சீரியல்களையும் தயாரிக்க திட்டமிட்டு வருகிறேன். இதுதவிர ஆதாம், ஏவாள் குறித்த தொடரும் எனது மனதில் உள்ளது. மேலும், சாத்தானின் செயலால் நமது மனிதகுலம் கடவுளிடமிருந்து எவ்வளவு தூரம் விலகிப் போயுள்ளது என்பதை விளக்கும் சீரியலும் திட்டத்தில் உள்ளது.

தற்போது உள்ள பெரிய திரை சூப்பர் ஸ்டார்களை நினைத்தால் எனக்கு கோபம் கோபமாக வருகிறது. வீட்டில் உட்கார்ந்து குடும்பத்தோடு இவர்களது படங்களையெல்லாம் பார்க்க முடிவதே இல்லை.

ஆனால் பெரிய திரையில் கூட இந்த சூப்பர் ஸ்டார்கள் செய்ய முடியாததை நான் சின்னத் திரையில் சாதிக்கப் போகிறேன்.

இயேசு நாதர் கேரக்டரில் நடிக்க புதுமுகங்களை பார்த்து வருகிறோம். எங்களுக்கு இயேசுநாதர் வேடத்தில் நடிக்க சிக்ஸ் பேக் ஆட்கள் எல்லாம் தேவையில்லை. சாதாரண, எளிமையான, தெய்வீகமான முகம் கொண்டவர்கள்தான் தேவை என்றார் ராக்கி.

ராக்கி வர வர ரொம்பவே பேச ஆரம்பித்து விட்டார்..!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X