ஜெனிலியாவுடன் காதலா?- மத்திய அமைச்சர் மகன் பதில்

விலாஸ்ராவ் தேஷ்முக் மகாராஷ்டிர முதல்வராக இருந்தபோதே,அவர் மகன் ரிதேசுக்கும் ஜெனிலியாவுக்கும் காதல் ஏற்பட்டு விட்டதாகவும், இருவரும் ஒருமுறை யாருக்கும் தெரியாமல் கோவா சர்ச்சில் திருமணம் செய்து கொள்ள முயன்று அந்த முயற்சி தோற்றுப் போனதாகவும் கூறப்பட்டது. காரணம் இந்தக் காதலில் ரிதேஷ் தரப்பில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.
இந்த காதல் பற்றி ஜெனிலியாவிடம் கேட்டபோது, முதலில் மறுத்தார். இருவரும் நண்பர்கள் என்றார். அதிகாரத்தை பயன்படுத்தி விலாஸ்ராவ் தேஷ்முக் மிரட்டியதால் ஜெனிலியா பயந்துவிட்டதாக தகவல்கள் வெளியாயின.
இந்த நிலையில் ரிதேஷ் தேஷ்முக்கும் இந்தக் காதல் விவகாரம் பற்றி விளக்கம் அளித்துள்ளார். அதில், "நானும், ஜெனிலியாவும் காதலிப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன. நாங்கள் இருவரும் நண்பர்களாகத்தான் பழகுகிறோம். எங்களுக்குள் காதல் எதுவும் இல்லை.
சினிமாவில் பிரபலமாக இருப்பவர்கள் மீது இது போன்ற கிசுகிசுக்கள் வருவது சகஜம்தான். அதோடுதான் வாழ வேண்டி இருக்கிறது. யார் மீதும் இதுவரை எனக்கு காதல் ஏற்படவில்லை..." என்று தத்துவமாகப் பொழிந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











