ரஜினியை வைத்து இன்னொரு முள்ளும் மலரும் தர ஆசை! - இயக்குநர் சேரன்

By Shankar

ரஜினிக்கு பெருமை தரும் வகையிலான தனித்துவமான படத்தைத் தரும் அளவுக்கு என்னிடம் ஒரு கதை உள்ளது. ஆனால் அதில் ரஜினி நடிப்பாரா என்றுதான் தெரியவில்லை, என்றார் இயக்குநர் சேரன்.

தமிழ் சினிமா இயக்குநர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் சேரன். சமீபகாலமாக நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் அவர், சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் இப்படிக் கூறியுள்ளார் -

படம் இயக்குவதைவிட சுலபமானது, நடிப்புதான். அது, இன்னொருவரை சார்ந்து இருப்பதால் சுலபம். இயக்குநர் என்றால் பொறுப்பு அதிகம். நடித்துக்கொண்டே இயக்குவது இன்னும் கூடுதல் பொறுப்பு. கொஞ்சம் கவனம் சிதறினாலும் பின்விளைவு மோசமாக இருக்கும். ஒரு தாய் இரட்டை குழந்தை பெறுவது போன்ற விஷயம். குழந்தை சுமூகமாக பிறந்தால், எல்லோருக்கும் நல்லது.

மொழி சாராமல், உலகம் முழுக்க எல்லோருடைய உணர்வுகளையும் ஒன்று சேர்க்கிற மாதிரி ஒரு படம் எடுக்கணும். அதற்கான கதை என்னிடம் தயாராக இருக்கிறது. தயாரிப்பாளர்தான் கிடைக்கவில்லை

தவமாய் தவமிருந்து மாதிரி இன்னொரு படம் கொடுக்க எனக்கும் ஆசைதான். ஆனால் சினிமா என்பது வியாபாரம் சார்ந்தது. தவமாய் தவமிருந்து படத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. ஆனால், ஆட்டோகிராப் படத்துக்கு கிடைத்த வெற்றி, தவமாய் தவமிருந்து படத்துக்குக் கிடைக்கவில்லை. வியாபாரம் சார்ந்த சினிமாவில் வெற்றியே பிரதானமாக கருதப்படுகிறது.

ரஜினி படம்...

ரஜினியை வைத்துப் படமெடுக்க வேண்டும் என்ற ஆசை இல்லாத எந்த இயக்குநரும் தமிழ் சினிமாவில் இருக்க முடியாது. ஆனால் என் படத்துக்கான பார்வை வேறு மாதிரி ஆகிவிட்டது. அதில், ரஜினிக்காக வர்த்தக விஷயங்களை சேர்க்க வேண்டும். என் படங்களிலும், பாலா படங்களிலும் ஒரு அழுத்தம் இருக்கும். ஆனால், வர்த்தக ரீதியில் ரூ.30 கோடி அல்லது ரூ.35 கோடி முதலீடு தேவை இருக்காது.

அப்படி ஒரு கதை என்னிடம் இருக்கிறது. அந்த கதையில் அவர் நடித்தால், முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் மாதிரி அவருடைய வாழ்நாள் முழுவதும் பேசக்கூடிய படமாக அது இருக்கும். தமிழ் ரசிகர்களுக்கு நல்வழி ஏற்படுத்தி கொடுக்கும் படமாக இருக்கும். அதில் நடித்தால் நிச்சயம் அவருக்கு மிகப் பெரிய பெயர் கிடைக்கும். தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படமாக இருக்கும். அந்த படத்தில் நடிப்பது, அவர் கையில்தான் இருக்கிறது. என் கையில் இல்லை, என்றார்.

அடுத்த தலைமுறை எனும் பெயரில் தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் தீவிரமாக உள்ளார் சேரன். இந்தப் படத்தை அவரே இயக்குகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X