அரசியல்.. எண்ணமேயில்லை!-கமல்

கமலஹாசனின் தசாவதாரம் படம் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த இதன் வெளியீட்டு விழாவில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
அரசியல் உலகுக்கு என்னை ஏராளமான கட்சிகள், என் நண்பர்கள் அழைக்காமலில்லை. ஆனால் எனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை.
வேடிக்கைக்காக, விளையாட்டாக, திடீரென ஆச்சரியம் உண்டாக்குவதற்காக ஒருவர் அரசியலுக்கு வரக் கூடாது என்று நினைக்கிறேன். பொறுப்பாக செயல்பட வேண்டும், உறுதியான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால்தான் அரசியலுக்கு வரவேண்டும்.
என்னைப் பொறுத்தவரை நான் சொல்ல நினைத்ததை நாயகன், ஹே ராம், இந்தியன், தசாவதாரம் போன்ற படங்களிலேயே சொல்லிவிட்டதாக நம்புகிறேன்.
தென்னிந்திய தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா மாதிரி, வடக்கில் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களால் மின்ன முடியவில்லையே ஏன்?
"எனக்கு பெரிதாக எந்தக் காரணமும் தெரியவில்லை. ஒரு வேளை தென்னிந்தியாவில் உள்ள படிப்பறிவு நிலை ஒரு காரணமாக இருக்கலாம்" என்றார்.
சரி... நீங்கள் எப்போதும் அரசியலை விட்டு விலகியிருப்பது ஏன்?
நான் எப்போது சேர்ந்து இருந்தேன், இப்போது விலக. ஆனால் ஒருவர் முழுக்க முழுக்க அரசியலை விட்டு விலகி இருக்க முடியாது. ஒன்று தனக்கு விருப்பமான ஒருவருக்கு ஓட்டு போட்டாக வேண்டும், அல்லது விருப்பம் இல்லையென்றால் ஓட்டு போடாமலாவது இருக்க வேண்டும். நான் முதல் வேலையை ஒழுங்காகச் செய்கிறேன் என்றார் கமல்ஹாஸன்.


Click it and Unblock the Notifications











