twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு படம் பண்ணிட்டு காலரை தூக்கிவிட்டுக்கறாங்க!-பாக்யராஜ்

    By Shankar
    |

    K Bagyaraj
    சினிமா என்பது கடைசி வரை கற்றுக் கொள்ளும் விஷயம்தான். ஆனால், இப்போது சில இயக்குநர்கள் ஒரே படம் பண்ணிவிட்டு காலரைத் தூக்கிவிட்டுக் கொள்கிறார்கள். அதான் பயமாக உள்ளது, என்றார் இயக்குநர் கே பாக்யராஜ்.

    தனஞ்செயனின் தி பெஸ்ட் ஆப் தமிழ் சினிமா புத்தக வெளியீட்டு விழாவில் இயக்குநர் கே பாக்யராஜ் பேச்சுதான் மிகவும் சுவாரஸ்யமாகவும் ஹைலைட்டாகவும் அமைந்தது.

    அவர் பேச்சின் ஒரு பகுதி:

    சினிமாவில் சாதித்துவிட்டோம் என்று சொல்ல ஒன்றுமே இல்லை. தினமும் கற்றுக் கொள்கிற விஷயம் அது.

    அதேபோல, நான்தான் இதை முதலில் செய்தேன் என்று யாரும் கர்வத்தோடு சொல்ல முடியாது. காரணம் நமக்கு முன்பே சிலர் அதைச் செய்திருக்கக் கூடும். அந்த விஷயம் நமக்கு இப்போது உதித்திருக்கும் அவ்வளவுதான்.

    உதாரணத்துக்கு, புதிய வார்ப்புகள் படத்தின் க்ளைமாக்ஸில், நாயகி ஜோதி தன் பெயருக்கேற்ப நெருப்பில் எரிவது போல வைத்திருந்தோம். பெயரை புதிய வார்ப்புகள் என்று வைத்துவிட்டு, இப்படி பழைய க்ளைமாக்ஸா வச்சா நல்லாருக்காதே என எங்கள் இயக்குநர் பாரதிராஜா கருதினார். உடனே கவுண்டமணி கட்டிய தாலியை கழற்றி எறிந்துவிட்டு ஹீரோவோடு போவதுபோல காட்சியை மாற்றினோம். ஆனால் இது சரியாக இருக்குமா... மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என பெரிய விவாதம் எங்களுக்குள் நடந்தது.

    இறுதியில் அதே காட்சியை வைத்தோம். தமிழ் சினிமாவில் இதற்கு முன் யாரும் வைக்காத காட்சி இது என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் நாங்கள் நினைத்தது தவறு என்பது இப்போது புரிகிறது. காரணம் 1930களிலேயே குமுதினி என்ற படத்தில், மனைவி தாலியைக் கழற்றி வீசிவிட்டு காதலனுடன் செல்வது போன்ற காட்சியை துணிச்சலாக வைத்திருக்கிறார்கள்.

    சினிமாவில் கண்களை திறந்து வைத்திருக்க வேண்டும்.ய.. காதுகளைத் தீட்டி வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் பல விஷயங்களை தினமும் தெரிந்து கொண்டே இருக்க முடியும்.

    இன்றைக்கு ஒரு வெற்றிப் படம் கொடுத்த சிலர் செய்யும் அலட்டல் தாங்க முடியவில்லை. காலரைத் தூக்கி விட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் தலை பூமியைப் பார்ப்பதே இல்லை. இவங்களையெல்லாம் பாத்தா என்னைப் போன்றவர்களுக்கு கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.

    ஆக்ரி ராஸ்தாவில்....

    எனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தைச் சொல்கிறேன். ஒரு கைதியின் டைரி படத்தை நான்தான் எழுதினேன். இந்தப் படத்தை இந்தியில் அமிதாப்பை வைத்து ஆக்ரி ராஸ்தா என எடுத்தேன். இந்தக் கதையில் ஹீரோவுக்கு இரட்டை வேடம். எனக்கோ இரட்டை வேடக் காட்சிகள் எடுத்துப் பழக்கமில்லை. எங்கள் இயக்குநரும் இரட்டை வேடப் படம் எதுவும் எடுக்கவில்லை. கைதியின் டைரி படத்தில் கூட இரண்டு கமல்களும் சந்திப்பது போன்ற காட்சியை அவர் எடுக்கவில்லை. ஆனால் ஆக்ரி ராஸ்தாவில் அப்பா - மகன் சந்திப்பது போன்ற காட்சி வைத்திருந்தேன்.

    இந்தக் காட்சி படமாகும்போது எனக்கு பதைப்பாக இருந்தது. காரணம், இரட்டை வேட காட்சியை எடுக்கத் தெரியவில்லை என அமிதாப் நினைத்துவிட்டால் என்ன ஆவது என்ற எண்ணம்தான்.

    அப்போது கேமிராமேனும் அமிதாப்பும் அந்தக் காட்சியை எப்படி எடுக்கலாம் என விவாதித்துக் கொண்டிருந்தனர். அதில் அமிதாப் ஒரு டெக்னிக்கில் எடுக்கலாம் என்றார் (டப்பிங்). கேமிராமேன் மாஸ்க் முறையில் எடுக்கலாம் என்றார். எனக்கோ இரண்டுமே தெரியாது!

    உடனே சாமர்த்தியமாக, முதல் வேடத்துக்கு அமிதாப் சொல்வது போலவும், இரண்டாவது வேடத்துக்கு கேமராமேன் சொல்வது போலவும் எடுங்கள் என்று கூறினேன். அன்றைக்கு இரட்டை வேடக் காட்சி எடுப்பது எப்படி என்பதில் தெளிவு ஏற்பட்டுவிட்டது. நான் கற்றுக் கொண்டேன்... இதுதான் சினிமா..", என்று பேசி முடிக்க அரங்கம் கைத்தட்டலில் அதிர்ந்தது!

    English summary
    Veteran film director K Bagyaraj criticised few new directors for their arrogant manner. In a book release function he told, "some of the new directors pulling up their collars even after gave a single hit in the industry. But Cinema is always a learning process".
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X