ஷக்தியின் ஆசை!

தமிழ்த் திரையுலகின் வெற்றிகரமான ஆக்ஷன் பட இயக்குநர்களில் ஒருவர் ஷக்தி சிதம்பரம். சமீபத்தில் அவரது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான சண்டை வெற்றிப் படமாகியுள்ளது. இதனால் விநியோகஸ்தர்கள் மத்தியில் ஷக்திக்கு மவுசு கூடியுள்ளது.
குறைந்த பட்ஜெட்டில் இவர் இயக்கிய என்னம்மா கண்ணு, சார்லி சாப்ளின், மகா நடிகன், இங்கிலீஷ்காரன், கோவை பிரதரஸ், சண்டை என எனது அனைத்துப் படங்களுமே வசூலில் ஏமாற்றவில்லை.
இந் நிலையில் தொடர்ந்து ஆக்ஷன் படங்களையே இயக்கப் போவதாக கூறுகிறார் ஷக்தி.
எனது படங்களில் காமெடிக்குத்தான் பிரதான இடம் இருக்கும் என்பார்கள். ஆனால் காமெடியை வைத்துப் படம் எடுப்பது என்பது சாதாரண காரியமல்ல. இப்போது சண்டை என்னை ஆக்ஷன் பட இயக்குநராக மாற்றியுள்ளது. தொடர்ந்து ஆக்ஷன் படங்களை எடுக்கவே நானும் ஆசைப்படுகிறேன்.
தற்போது பெரிய சம்பளத்துடன் 3 வெளிப்படங்களை இயக்கும் வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் சொந்தப் படங்களில் மட்டுமே நான் இப்போதைக்கு கவனம் செலுத்த விரும்புகிறேன். அதில் சுந்தர்.சியுடன் மீண்டும் இணைந்து இடி என்ற படத்தை எடுக்கவுள்ளேன். இப்படத்தில் விஜயசாந்தியையும் நடிக்க வைக்க முயன்று வருகிறேன். படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடும் எண்ணமும் உள்ளது.
எனது தயாரிப்பில் பேரரசு ஒரு படம் இயக்கவுள்ளார். இன்னொரு படத்தில் பரத் நாயகனாக நடிக்கவுள்ளார் என்றார் ஷக்தி.


Click it and Unblock the Notifications











