தமிழ் ஹீரோக்கள்னா எனக்கு இஷ்டம்-ஹன்சிகா

தமிழ் திரையுலகில் வீசும் புதிய புயலின் பெயர் தான் ஹன்சிகா. கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்த உடனேயே படு வேகத்தில் பிரபலமாகி உள்ளார். கோடம்பாக்கத்தில் இவர் கொடுக்கும் விருந்து தான் ஹாட் டாபிக்.
அவர் தற்போது வேலாயுதம், மாப்பிள்ளை ஆகிய 2 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தன் சினிமா அனுபவம் பற்றி அவர் கூறியதாவது,
நான் தெலுங்கில் இருந்து தான் தமிழ் சினிமாவிற்கு வந்திருக்கிறேன். நான் நடித்து ஒரு படம் கூட வெளியாகவில்லை. அதற்குள் எனக்கு நிறைய தமிழ் ரசிகர்கள் கிடைத்துவிட்டார்கள். அவர்களின் அன்பைப் பார்த்து நான் திக்குமுக்காடியுள்ளேன்.
எனக்கு இவ்வளவு ரசிகர்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ் சினிமா எனக்கு பிடித்திருக்கிறது. குறிப்பாக தமிழ் ஹீரோக்களை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. தமிழ் ஹீரோக்களின் அர்ப்பணிப்பையும், உழைப்பையும் பார்த்து வியக்கிறேன்.
நான் நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் இயக்குனர் பிரபு தேவா. அவரை நான் புகழ்ந்து பேசியதை வைத்து வதந்திகள் வருகின்றன. அவர் என்னுடைய வழிகாட்டி. வதந்திகளுக்கு அஞ்சுபவள் நான் அல்ல என்கிறார் ஹன்சிகா.


Click it and Unblock the Notifications











