எதுவும் செய்யத் தயார்!-பியாவின் தாராளம்

By Staff

Piya
ரசிகர்களுக்காக அதிகபட்ச கவர்ச்சிக் காட்சிகளில் தாராளமாய் நடிப்பேன். அதுவும் நீச்சலுடைக் காட்சிகளில் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்கிறார் கோவா நாயகிகளுள் ஒருவரான பியா.

ஏகன் படத்தில் அறிமுகமானவர் பியா. பின்னர் பொய் சொல்லப்போறோம், கோவா' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

நிருபர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "இயல்பாகவே எனக்கு துணிச்சல் அதிகம். காரணம் பூலான் தேவியின் சொந்த ஊரான பூலான்தான் நான் பிறந்த ஊர்.

எங்க குடும்பத்தில் அம்மா, அப்பா, அக்கா, அண்ணன் எல்லோருமே ஆசிரியர்கள். என்னையும் ஆசிரியராக பார்க்க ஆசைப்பட்டார்கள். ஆனால் எனக்கு அந்த ஆசை இல்லை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்றேன். வீட்டில் கடுமையான எதிர்ப்பு. வேறு வழியில்லாமல் டிவி சீரியலில் நடிக்கப் போவதாக பொய் சொல்லிவிட்டு, தனியாக மும்பை வந்தேன். 2 நாட்கள் ஒரு ஓட்டலில் தங்கினேன். அப்புறம் ஒரு ஆதரவற்றோர் விடுதியில் போய் தங்கிக் கொண்டேன்.

டப்பிங் கலைஞராகத்தான் என் திரை வாழ்க்கை ஆரம்பமானது.

தொடர்ந்து முயற்சி செய்து, கதாநாயகி அந்தஸ்தை அடைந்து இருக்கிறேன். இதை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

இதற்காக முடிந்த வரை வி்டடுக் கொடுத்து நடிக்கிறேன். கவர்ச்சி காட்டி நடிக்கிறேன். அதில் தவறு ஒன்றுமில்லை.

நீச்சல் உடையில் கூட நடிக்கலாம். நான் அப்படி நடிக்க மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன்.
எனக்கு ரசிகர்கள் மனதில் இடம் வேண்டும். அதற்காக நான் எதுவும் செய்யத் தயார். இப்போதைக்கு என்னுடைய ஆசை, சென்னையில் வீடு வாங்கி குடியேறுவதுதான். ரசிகர்கள் எனக்கு அந்த வாய்ப்பை அளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது! என்றார் பியா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X