ஜாக்பாட் சீசன்-2.. நதியா ஸ்டைல்!

ஜெயா டிவியின் ஜாக்பாட் நிகழ்ச்சியை தொகுத்தளிக்கப் போகிறார் நதியா. இந்த நிகழ்ச்சிக்கு ஜாக்பாட் சீசன் 2 என பெயரிடப்பட்டுள்ளது. நதியாதான் இதை தொகுத்தளிக்கப் போகிறார் என்பதை ஜெயா டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜூன் 13ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.
இதுகுறித்து நதியா கூறுகையில், மிகவும் பிரபலமான ஷோ இது. இதை நடத்தப் போவதில் பெருமை அடைகிறேன், மகிழ்ச்சியாக இருக்கிறது. எப்படி இது வித்தியாசமானதாக இருக்கும் என்பதை நான் சொல்ல முடியாது. இருப்பினும் நதியா ஸ்டைல் கண்டிப்பாக இதில் இருக்கும்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் நானும் நிறைய கற்றுக் கொள்ள முடியும். நான் கற்றுக் கொண்டதை ஆடியன்ஸுக்குத் தரப் போகிறேன் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் அரசியல் பின்னணி எதுவும் காரணமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் முற்றிலும் அரசியல் சார்பற்ற ஒரு பெண் என்றார் நதியா.
ஜாக்பாட் நிகழ்ச்சியை முன்பு தொகுத்து வழங்கியவர் குஷ்பு. இந்த நிகழ்ச்சியில் இவர் போட்டு வந்த ஜாக்கெட்கள்தான் மிகப் பிரபலமானது. திடீரென குஷ்பு திமுகவில் போய்ச் சேர்ந்து விட்டதால், குஷ்புவை தூக்கி விட்டது ஜெயா டிவி.


Click it and Unblock the Notifications











