சசிகுமாருடன் சண்டையா?-கவுதம் மேனன் விளக்கம்

சுப்பிரமணியபுரம் படப் புகழ் சசிகுமாரை எதற்காக எல்லோரும் தலை தூக்கி வைத்து ஆடுகிறார்கள் என தெரியவில்லை என்று இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தபோது கூறினார்.
இதனால், முன்னணி வரிசையில் இருக்கும் இரு இயக்குனர்களுக்கும் இடையே மௌன யுத்தம் நடந்து கொண்டிருப்பதாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் தகவல் பரவியது.
ஆனால், தனக்கு சசிக்குமாருக்கு எந்தவித பிரச்னையும் இல்லை என்று கவுதம் வாசுதேவ் மேனன் தெளிவுபடுத்தி உள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், 'சுப்பிரமணியபுரம் சசிகுமாரை ஏன் தலைக்கு மேல் தூக்கிவைத்து ஆடுகிறார்கள் என்ற வார்த்தையை நான் சொல்லவே இல்லை.
சுப்பிரமணியபுரம் போன்ற படத்துக்கு விருது கிடைக்கும். என் படங்கள் அந்த பாணியில் இல்லை. வேறு மாதிரி படங்கள் என்று தான் நான் கூறினேன்.
சசிகுமார் மீது எனக்கு உள்ள அன்பின் காரணமாக, நான் தொடங்கப்போகும் சொந்த பட நிறுவனத்தின் படத்தை அவர் இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்போதும் ஆசைப்படுகிறேன்' என்றார்.
மேலும் தனது புது வரவான விண்ணைத்தாண்டி வருவாயா படம் குறித்து அவர் கூறுகையில், 'விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் கதைக்கு என்ன தேவையோ அதை கொடுத்து இருந்தேன்.
மக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்ற சின்ன கவலை எனக்கு இருந்தது. அந்த கவலை படம் வெளியான பின், போய்விட்டது. படம் பார்த்த அத்தனை பேரும், எங்க வாழ்க்கையில் நடந்த மாதிரி இருக்கிறது என்கிறார்கள்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களிலும் படம் வெற்றிபெற்று இருக்கிறது. இந்த படம் நான் சந்தித்த இரண்டு பேரின் கதை. அவர்கள் இப்போதும் இருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் யார்? என்று சொல்ல மாட்டேன். சொன்னால், பிரச்னை ஆகிவிடும். அந்த காதலர்களின் கதைக்குள், என் கற்பனையையும் சேர்த்து படமாக்கி இருக்கிறேன்.
என் அடுத்த படத்தில் அஜீத் கதாநாயகனாக நடிக்கிறார். தயாநிதி அழகிரி தயாரிக்கிறார். அதையடுத்து, சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் படத்தை இயக்குகிறேன்.
ஹாரீஸ் ஜெயராஜுடன் மீண்டும் இணையும் எண்ணம் இல்லை. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு வேறு மாதிரி தெரிந்தது போல், என் அடுத்த படத்தில் வேறு ஒரு அஜீத் வெளிப்படுவார்' என்றார்.


Click it and Unblock the Notifications











