முத்தத்துக்கு ஒரு ரேட்... கவர்ச்சிக்கு தனி ரேட்டா? - ஷ்ரியா பதில்

ஷ்ரியா சமீபகாலமாக படங்களில் அதிக கவர்ச்சியாக நடிக்கிறார். இதற்கென அவர் கூடுதல் சம்பளம் வாங்குவதாக கூறப்பட்டது. முத்தக்காட்சி, நீச்சல் உடை காட்சிகளுக்கென தனித்தனி சம்பளத்தொகை நிர்ணயித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி சமீபத்தில் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:
முத்தம் மற்றும் நீச்சல் உடை காட்சிகள் இந்திப் படங்களில் பிரபலம். அவை இப்போது தென்னிந்திய மொழி படங்களுக்கும் பரவி உள்ளது. அது சரியா தவறா என்பதற்குள் செல்ல நான் விரும்பவில்லை. அது அந்தந்த நடிகைகளின் மன நிலையை பொறுத்தது.
இந்த மாதிரி காட்சிகளில் நடிக்க நான் அதிக சம்பளம் கேட்பதாக செய்தி வந்துள்ளது. அதில் உண்மை இல்லை.
சினிமாவில் கவர்ச்சி இல்லாவிட்டால் நிலைக்க முடியாது. அழுது வடியும் நடிகைகளையும் படங்களையும் பார்க்கவா ரசிகர்கள் வருகிறார்கள்... மூன்று மணி நேரம் கவலைகளை மறந்து சந்தோஷமாக இருந்து விட்டு போக தியேட்டர்ளுக்கு வருகிறார்கள். அவர்களைத் திருப்திப்படுத்துவதுதான் கலைஞர்களின் வேலை. இதுதான் என் பாலிஸி. மத்தவங்களைப் பத்தி எனக்குத் தெரியாது... அது தேவையுமில்லை, என்றார்.
மேலும் ஒரு பாடலுக்கு இனி நடனமாட மாட்டேன் என்றும் அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











