இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி:
நான் புதுமுக நடிகர்களை வைத்து படம் எடுத்து, அவர்களை வெற்றி நாயகர்களாக ஆக்குவதையே விரும்புகிறேன்.
சிம்பு குழந்தை நட்சத்திரமாக இருந்த போதே அவரை வைத்து நான் பல படங்கள் எடுத்து இருக்கிறேன். அவர் இப்போது வளர்ந்து உயர்ந்த இடத்தில் உள்ளார்.
இனிமேல் என் மகன் சிம்புவை வைத்து படம் இயக்கும் எண்ணம் எனக்கில்லை. சிம்பு நடித்து அன்மையில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படம் மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளது.
இதையடுத்து சிம்புவிற்கு பெரிய படங்கள் இரண்டில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று அவர் கூறினார்.
Comments


Click it and Unblock the Notifications