சிம்புவுடன் 'லிப் டு லிப்' தப்பில்லை! த்ரிஷா

மேலும் இந்த மாதிரி முத்தக் காட்சிகளில் நடிப்பது எனக்கு ஒரு பிரச்சினையே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சிம்பு - த்ரிஷா நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சில இடங்களில் த்ரிஷாவும் சிம்புவும் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளனர். உதட்டோடு உதடு பதித்து முத்தங்களும் பறிமாறிக் கொள்கின்றனர்.
இதுபற்றி நடிகை த்ரிஷா நேற்று கூறியது:
முத்தக் காட்சிகளில் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கதைக்கு தேவை என்பதால் சிம்புவை முத்தமிட்டேன். அதில் தவறல்ல.
இது போன்ற காட்சிகள் கதையை பொறுத்தும் டைரக்டர் விருப்பத்தை பொறுத்தும்தான் அமைகின்றன. இயக்குனர் சொல்படி நான் செய்கிறேன். இதில் என் விருப்பமெல்லாம் இல்லை.
இன்றைக்கு திரையுலகில் ஒரு நிலையை எட்டி விட்டேன். சினிமா பற்றி தெரியாதவள் மாதிரி, முத்த காட்சிகள், நீச்சல் உடை காட்சிகளில் நடிக்க மறுத்தால் அது எனக்குத்தான் தகுதி குறைவு.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் என் கேரக்டரை பாராட்டி இமெயிலில் வாழ்த்துக்கள் குவிகின்றன. அவர்களுக்கெல்லாம் பதில் அனுப்பி வருகிறேன். நிறைய படங்களில் நடித்துள்ளேன். இதற்கு முன் இவ்வளவு பாராட்டுகள் வந்ததில்லை. இத்தனை அருமையாக விமர்சனங்களை யாரும் எழுதியதுமில்லை. அவற்றைப் படித்த பிறகுதான், என் மீது எனக்கே மரியாதை ஏற்பட்டுள்ளது. ஜெஸ்ஸி போன்ற கதாபாத்திரங்கள் அமைவது அபூர்வமானது. கௌதமுக்கு நன்றி.
ஸ்ரேயாவுடன் பிரச்சினையா?
எனக்கும் ஸ்ரேயாவுக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை.
ரவிதேஜாவுடன் தெலுங்கு படத்தில் நடிக்க அழைத்தனர். நானும் சம்மதித்தேன். ஆனால் அதற்கு மொத்தமாக நிறைய நாட்கள் கால்ஷீட் கேட்டனர். கமல் படம் உள்பட வேறு படங்களில் நடிக்க வேண்டி இருப்பது பற்றி அவர்களிடம் விளக்கினேன். பிறகுதான் அப்படத்தில் இருந்து விலகினேன்.
இப்போது எனக்கு பதில் ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்து இருப்பது பற்றி எனக்கு தெரியாது. எப்படியும் எனக்கு பதில் வேறு யாரையாவது அவர்கள் ஒப்பந்தம் செய்துதானே ஆக வேண்டும்.
கமலுக்காக தயாராகிறேன்...
கமல் ஹாஸன் என்னை அழைத்து யாவரும் கேளிர் பட கேரக்டர் பற்றி சொன்னார். அப்படத்தில் நான் நிச்சயம் வித்தியாசமாக தெரிவேன். என் உடைகளை புதிய ஆடை வடிவமைப்பாளரை வைத்து தயார் செய்கிறார்கள். கமல் சார் எதையும் கச்சிதமாக செய்யக்கூடியவர். படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பே தயார்படுத்திக் கொள்ளச் சொல்வார். ஏற்கெனவே அவருடைய மர்மயோகிக்காக அந்த அனுபவத்தைப் பெற்றுள்ளேன்..." என்றார்.


Click it and Unblock the Notifications











