அழகாக இருப்பது தவறா?-நதியா

By Staff

Nadhiya
நடுத்தர வயதுப் பெண்கள் தங்களை அழகாக வைத்துக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது. எனது அழகு இன்னும் அப்படியே இருப்பதற்காக பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார் நதியா.

எத்தனையோ முன்னாள் நடிகைகள் பொலிவிழந்து, அழகிழந்து, அம்மா வேடங்களிலும், பாட்டி வேடங்களிலும் நடித்துக் கொண்டுள்ளனர். நிறையப் பேர் பீல்டு அவுட் ஆகி விட்டனர்.

ஆனால் பெரிய இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்திருக்கும் நதியாவோ, இளம் ஹீரோயின்களுக்கு நிகரான அழகுடன், கித்தாப்பாக கலக்கிக் கொண்டிருக்கிறார். இதைப் பார்த்து நிறையப் பேருக்கு பொறாமையாம்.

ஆனால் நதியாவிடம் போய், நீங்கள் இவ்ளோ அழகா இருக்கீங்களே என்று கேட்டால், அதில் என்ன தப்பு என்ற நெத்தியடியாய் கேட்கிறார். நமது பெண்களில் பெரும்பாலானோருக்கு நடுத்தர வயதை எட்டி விட்டால் தங்களது அழகு குறித்த அக்கறை போய் விடுகிறது.

அழகு என்பது உடல் தோற்றத்ைத மட்டும் பொலிவாக வைத்துக் கொள்வதல்ல. நாம் அழகாக இருந்தால், நம்மை அழகாக வைத்துக் கொண்டால், அது நமது மன பலத்தை அதிகரிக்கும், நம்பிக்கையைக் கூட்டும், எதிலும் தைரியத்துடன் செயல்படும் பலத்தைக் கொடுக்கும் என்று பாடமே எடுக்கிறார் நதியா.

என்னைப் பொறுத்தவரை அழகாக இருப்பதிலும், நீட் ஆக டிரஸ் செய்து கொள்வதிலும் அக்கறை எடுத்துக் கொள்வேன். நான் 40 வயதுகளில் இருக்கிறேன்தான். அதற்காக நான் அழகாக இருக்கக் கூடாது என்று அர்த்தம் அல்ல.

எனது படங்களில் எனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்குமாறு நான் பார்த்துக் கொள்கிறேன். அதிலும் எந்தத் தவறும் இல்லை. நான் நடிக்கும் பெரும்பாலான படங்களில் என்னை விட அனுபவம் குறைந்தவர்கள்தான் நாயகிகளாக நடிக்கின்றனர். எனவே அவர்களை விட எனது கேரக்டர் வலுவானதாக இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில் என்ன தவறு என்கிறார் நதியா.

நதியா அழகாக இருப்பது மட்டுமல்ல, ரொம்ப அழகாகவும் பேசுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X