ரஜினியை வைத்து ஆக்ஷன் படம் தர ஆசை! - பேரரசு

தனது இந்த ஆசை குறித்து அவர் சமீபத்தில் செய்தியாளர்களிடம் இப்படிக் கூறியுள்ளார்:
நான் சினிமாவுக்கு வர ஆசைப்பட்டதே ரஜினி சார் ஷூட்டிங் பார்த்த பிறகுதான். முரட்டுக்காளை ஷூட்டிங்கில் அவரைப் பார்த்த பிறகு, எனது சினிமா ஆசை அதிகமானது. அவரை வைத்து ஒரு சூப்பர் ஆக்ஷன் படம் செய்ய ஆசை. நிறைவேறுமா அந்த ஆசை என்று தெரியவில்லை.
நாட்டு நடப்பு மற்றும் சமூகப் பிரச்சினைகளை மையப்படுத்தி படமெடுக்கவும் விரும்புகிறேன்.
ஆனால் இதற்கு வேறு தயாரிப்பாளர் தேடாமல், நானே தயாரிப்பேன். வெளி இயக்குநர்களுக்கும் இயக்க வாய்ப்பு தருவேன். ஆனால் ஹீரோவா நடிக்க மாட்டேன்.
அடுத்து விஜய் நடிக்கும் ஒரு படத்தை இயக்குகிறேன்.அது திருப்பாச்சியை விட டபுள் ஆக்ஷனா இருக்கும்!" என்கிறார்.
இப்போது பரத் நடிக்கும் திருத்தணி படத்தை இயக்கி வருகிறார் பேரரசு.


Click it and Unblock the Notifications











