சல்மான், ஆமிர்கான் இருவரும் ஒரே மாதிரி - ஆசின்

கோலிவுட் ஆசின் இப்போது பாலிவுட் ராணியாகியுள்ளார். முருகதாஸ் இயக்கத்தில் ஆமிர்கானுடன் அவர் ஜோடி போட்ட முதல் இந்திப் படமான கஜினி பெரும் ஓட்டம் ஓடியதால் ஆசின் குறித்து அங்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
தற்போது தனது 2வது இந்திப் படத்தை முடித்து விட்டார் ஆசின். சல்மான் கானுடன் இணைந்து அவர் நடித்துள்ள லண்டன் ட்ரீம்ஸ் விரைவில் திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் இரு கான்கள் குறித்தும் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு படு டிப்ளமேட்டிக்காக பதிலளித்துள்ளார் ஆசின்.
அவர் கூறுகையில், இருவரும் ஒரே மாதிரியான கேரக்டர்களைக் கொண்டவர்கள். அதேசமயம், வேலை பார்க்கும் ஸ்டைலில் இருவரும் வேறு வேறாக உள்ளனர்.
இருவருமே மென்மையானவர்களாக உள்ளனர், தோழமையுடன் பழகுகின்றனர். படு இயல்பாக உள்ளனர். டென்ஷனே ஆவதில்லை என்கிறார் ஆசின்.
அதேயமயம், இருவரது ஒர்க்கிங் ஸ்டைலும் வேறு மாதிரியாக உள்ளது. உதாரணத்திற்கு ஆமிர்கான் செட்டுக்கு வந்தவுடன் காட்சி குறித்து தனது சக கலைஞர்களுடன் உட்கார்ந்து ஆலோசனை நடத்துவார். ஐடியாக்கள் கொடுப்பார், திருத்தங்கள் செய்யலாமே என்று ஆலோசனை சொல்வார். காட்சியுடன் ஒன்றிணைந்து விடுவார்.
அதேசமயம், சல்மான் கான் படப்பிடிப்புக்கு வந்தவுடன் தனது காட்சியை நடித்துக் கொடுத்து விட்டு போய்க் கொண்டே இருப்பார். ஐடியா கொடுக்கவும் மாட்டார். மற்றவர்கள் ஐடியா தந்தாலும் ஏற்கவும் மாட்டார். அதேசமயம், அவரது நடிப்பில் ஒரு குறை கூட கூற முடியாது. யாரும் திருத்தமும் சொல்ல தேவையிருக்காது. அவ்வளவு முழுமையாக, கரெக்டாக இருக்கும் அவரது நடிப்பு என்றார் ஆசின்.
லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் சல்மான் கானுடன் அஜய் தேவ்கனும் இணைந்து நடித்துள்ளார். இப்போது அஜய் தேவ்கனின் நல்ல தோழியாகி விட்டாராம் ஆசின். அஜய் தேவ்கனிடமிருந்து நிறைய யோசனைகளை கேட்கிறாராம்.
லண்டன் ட்ரீம்ஸ் படத்தின் கதை - இரு பால்ய கால தோழர்களுக்கு (சல்மான், அஜய் தேவ்கன்) இசைத் துறையில் சாதிக்க வேண்டும் என்பது ஆசை. இருவரும் இணைந்து ஒரு இசைக் குழுவை ஆரம்பிக்கிறார்கள். அதில் நடனம் ஆடும் பெண்ணாக வந்து சேருகிறார் பிரியா (ஆசின்). பிரியா மீது இருவருக்குமே காதல் மலருகிறது. கடைசியில் என்ன ஆகிறது, நண்பர்களின் லட்சியம் நிறைவேறுகிறதா என்பதுதான் கதையாம்.
நல்ல கதைதான்...


Click it and Unblock the Notifications











