எனக்கும், ரன்வீர் ஷெராய்க்கும் கல்யாணமாகி விட்டது-கொங்கனா சென் சர்மா

By Chakra

Konkona Sen Sharma
பாலிவுட் நடிகை கொங்கனா சென் சர்மா, தனது நீண்ட நாள் காதலர் ரன்வீர் ஷெராயை மணம் புரிந்துள்ளதாக அறிவித்துள்ளார். மும்பையில் ரகசியமாக இந்த கல்யாணம் நடந்துள்ளதாம்.

இதுகுரித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கொங்கனா கூறுகையில், கய்ஸ், செப்டம்பர் 3ம் தேதி நானும், ரன்வீரும் மணம் புரிந்துள்ளோம். அனைவரது வாழ்த்துகளுக்காகவும் நன்றி, குட்நைட் என்றுகூறியுள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் 2 ஆண்டு கால காதல் நீடிப்புக்குப் பின்னர் செப்டம்பர்3ம் தேதி கொங்கனாவின் காரேகான் வீட்டில் வைத்து திருமணம் நடந்துள்ளது. இதில் பர்தீன் கான், ஷில்பாஷெட்டி உள்ளிட்ட வெகு சிலரே கலந்து கொண்டனராம்.

பாட்டியின் நகைகளை அணிந்து, பெங்காலி திருமண உடையில் கொங்கனா இருக்க, பஞ்சாபி உடையில் ரன்வீர் மணமகனாக காட்சி அளித்தாராம்.

வங்கத்து நடிகை அபர்ணா சென்னின் மகள்தான் கொங்கனா சென். மிஸ்டர் அன்ட் மிஸஸ் ஐய்யர் உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.

கோஸ்லா கா கோஸ்லா, பியார் கே சைட் எபக்ட்ஸ், ஹனிமூன் டிராவல்ஸ் பிரைவேட் லிமிட்டெட், மிக்ஸட் டபுள்ஸ் ஆகிய படங்களில் நடித்தவர் ரன்வீர் ஷெராய். முன்னாள் விஜேயும் கூட.

திருமணம் புரிந்துள்ள கொங்கனாவுக்கு நடிகை ஜெனிலியா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X