அதிமுகவுக்கு பிரச்சாரம்-பாபிலோனா!

தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 70 படங்கள் வரை முடித்துள்ளார். ஆனால் இதைவிட அதிக எண்ணிக்கையில் நட்சத்திர இரவுகள், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.
திரையுலகில் தனக்குக் கிடைத்த புகழையும் விளம்பரத்தையும் வீணாக்க விரும்பாத பாபிலோனா, இந்த தேர்தலிலேயே களம் காண தயாராகிவிட்டார். இவரது நெருங்கிய உறவினர் முன்னாள் நடிகை மாயா, காங்கிரஸ் கட்சியில் நீண்டகாலம் கலைச் சேவை புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் பாபிலோனாவும் அரசியல் சேவையில் இறங்குகிறார். அவர் கூறுகையில்,
சிறு வயதிலேயே எனக்கு அரசியல் ஆர்வம் நிறைய உண்டு. சினிமாவில் ஒரு நிலைக்கு போனதும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று ஆரம்பத்திலேயே திட்டமிட்டேன். அந்த நேரம் இப்போது வந்துவிட்டது.
நான் சேர விரும்பும் கட்சி புரட்சி தலைவி அம்மாவின் அதிமுக. என்னையும் இணைத்துக் கொள்ளும்படி கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளேன் புரட்சித் தலைவிக்கு.
அதிமுகவை நான் தேர்ந்தெடுத்ததற்கு பல காரணங்கள் உண்டு. அவரை மாதிரி தன்னம்பிக்கை கொண்ட பெண்களைப் பார்ப்பது அரிது.
தனக்கு வந்த அத்தனை சேதனைகளையும் எதிர்த்து போராடி துணிச்சலாக வெளிவந்த புரட்சிப் பெண்மணி அவர். அவர் தலைமைதான் நாட்டுக்குத் தேவை. அதிமுக ஆட்சி காலம் பொற்காலம். சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்தது.
என்கடைசி காலம் வரை இனி அரசியலில் இருப்பேன். நல்ல கேரக்டர்கள் வந்தால் நடிப்பேன். பாராளுமன்ற தேர்தலில் புரட்சித் தலைவி அனுமதியோடு தமிழ்நாடு முழுவதும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய விரும்புகிறேன் என்றார் பாபிலோனா.


Click it and Unblock the Notifications











