'ஏமாத்திப்புட்டாகளே..!'

கண்ணும் கண்ணும் நாயகி உதயதாரா, 2வது நாயகியாக நடித்து சமீபத்தில் வெளியான படம் மலையான். கரண் இப்படத்தின் நாயகன். இருவரும் சேர்ந்து தீ நகர் படத்தில் ஜோடி போட்டிருந்தனர்.
மலையன் படத்தில் நாயகியாக மலையாளத்து ஷம்மு நடித்திருந்தார். உதயதாராவுக்கு வெகு குறைச்சலாகவே காட்சிகள் இருந்தன. ஆனால் உண்மையில் நிறைய காட்சிகளில் நடித்திருந்தாராம் உதயா.
ஆனால் கடைசி நேரத்தில் பல காட்சிகளை வெட்டிக் கடாசி விட்டார்களாம்.
இதுகுறித்து உதயதாரா வருத்தத்துடன் கூறுகையில், இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட், இருவருக்கும் சமமான வாய்ப்பு இருக்கும் என்றுதான் இயக்குனர் கோபி சொன்னார்.
பட்டாசுத் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஹீரோவை அங்கு வேலை செய்யும் நான் காதலிப்பதாக காட்சிகள் எடுத்தார்கள். திடீரென உங்கள் கேரக்டரை மாற்றி இருக்கிறோம். ஆனாலு எடுத்த காட்சிகள் அனைத்தும் படத்தில் இருக்கும் என்று சொல்லி புதிதாக நர்ஸ் கேரக்டரில் நடிக்க வைத்தார்கள்.
ஆனால் இப்போது பார்த்தால் பழைய காட்சிகளை எல்லாம் வெட்டி விட்டது தெரிய வந்து அதிர்ந்து போனேன். என்னை இயக்குநர் கோபி ஏமாற்றி விட்டார் என்று பொறுமித் தள்ளி விட்டார் உதயதாரா.


Click it and Unblock the Notifications











