twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'நல்ல படத்துக்கு தேவை நடிகர்கள் அல்ல'

    By Staff
    |

    Prakash Raj with Trisha
    ஒரு நல்ல படத்துக்கு பெரிய நடிகர்கள், டெக்னீஷியன்கள்தான் இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. நல்ல கதை இருந்தாலே போதும், வெற்றி கிடைக்கும் என்கிறார் பிரகாஷ்ராஜ்.

    நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரித்து நடித்த படம் அபியும் நானும். தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடடிக் கொண்டிருக்கிறது இந்தப்படம். வெளிநாடுகளிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு.

    அபியும் நானும் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் அறிய பிரகாஷ்ராஜ் நேற்று மதுரை வந்தார். படம் ஓடும் தியேட்டர்களுக்குப் போய் ரசிகர்களுடன் அமர்ந்து அவரும் படம் பார்த்தார். மதுரை தங்க ரீகல் தியேட்டரில் ரசிகர்களின் கருத்தையும் கேட்டார்.

    பின்னர் நிருபர்களைச் சந்தித்l பிரகாஷ்ராஜ் கூறியதாவது:

    அபியும் நானும் படத்தின் வெற்றி எதிர்பார்த்ததே. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே உறுதியாக இதைச் சொன்னேன். காரணம் இந்தப் படத்தின் கதை அப்படி. ஒரு தயாரிப்பாளராக என்னைப் பெருமிதப்பட வைத்த படம் இது.

    ஒரு மகளுக்கும், அப்பாவுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டத்தை இயல்பாகச் சொல்லி இருக்கிறோம். ஒவ்வொரு ரசிகரும் இந்தப் படத்தில் தங்கலை ஐக்கியப்படுத்திக் கொண்டு ரசிப்பதாகச் சொன்னார்கள். இந்த வெற்றி இன்னும் உலகத்தரமான படங்களை எடுக்க வேண்டும், அவற்றில் நடிக்க வேண்டும் என்ற வேகத்தை எனக்குக் கொடுத்துள்ளது. உங்களிடமிருந்து நான் எதிர்பார்ப்பது இதைத்தான். இந்த ஆதரவுதான் தமிழ் சினிமாவை அடுத்த தளத்துக்குக் கொண்டு செல்ல என்னைப் போன்றவர்களுக்கு உதவும்.

    கில்லி படத்தில் நடிகை திரிஷாவை வில்லனாக துரத்துவேன். ஆனால் இந்த படத்தில் திரிஷாவின் தந்தையாக நடித்ததை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதற்கு முன்பு ரசிகர்கள் ஹாய் செல்லம் என்று என்னை அழைத்து வந்தார்கள். இப்போது எல்லோரும் என்னை அப்பா என்று அழைக்கிறார்கள். ஒரு படம் வெற்றி பெற ஸ்டார் நடிகர்கள் நடிக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

    நல்ல கதை அம்சங்கள் கொண்ட படங்களை எடுத்தால் மக்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள் என்பது இந்த படத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. படத்தின் டைரக்டர் ராதா மோகன், நடிகர் குமாரவேல் போன்ற திறமையானவர்களுடன் பணிபுரிவது புதிய சிந்தனையை, புதிய உத்வேகத்தை கொடுக்கிறது.

    வெள்ளித்திரை சுமாராகப் போனதால் நான் சோர்ந்து போய்விடவில்லை. அந்த மைனஸை பிளஸ்ஸாக்கும் முயற்சிகளில் இறங்கியிருந்தேன். அபியும் நானும் அப்படியொரு முயற்சிதான்.

    ஆனால் ஒன்று, இன்னும் எத்தனை சோதனையான கட்டத்துக்குப் போனாலும், என்னிடமிருந்து உங்களுக்கு இப்படிப்பட்ட நல்ல படங்கள்தான் கிடைக்குமே தவிர, மோசமான, தரமற்ற படங்கள் தரமாட்டேன். என்னை நம்பலாம் என்கிறார் பிரகஷ்ராஜ்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X