ஏக்கத்தோடு விடைபெறுகிறேன்-கோபிகா

திரையுலகை விட்டு முழுமையாக விலகிப் போனாலும், அம்மணிக்கு ஒரே ஒரு ஏக்கம் மட்டும்தான் பாக்கியிருக்கிறதாம்.
ஆட்டோகிராப்பில் நடித்து முடித்த கையோடு கோபிகாவுக்கு வந்த வாய்ப்பு 'காதல்' படம். ஆனால் அந்தப் படத்துக்கு கால்ஷீட் தர மறுத்துவிட்டாராம் கோபிகா, அப்போதிருந்த சூழலில். ஆனால் படம் வெளியாகி புதிய வசூல் சரித்திரம் படைத்தது.
இப்போதும் அதேபோன்றதொரு வாய்ப்பு வந்த்தாம். ஆனால் திருமணம் நிச்சயமாகிவிட்டதால் அதிலும் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.
எர்ணாகுளத்தில் நடந்து முடிந்த திருமண வரவேற்புக்குப் பிறகு சிறிது நேரம் மலையாளப் பத்திரிகையாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த கோபிகா, இப்படிக் கூறினார்:
தமிழிலும் மலையாளத்திலும் நல்ல நடிகை என்ற பெயரோடுதான் விடைபெறுகிறேன். ஆனால் காதல் மாதிரி மிகச் சிறந்த படம் ஒன்றில் நடிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தோடு விடைபெறுகிறேன். இந்த ஒரு ஏக்கம்தான் எனது திரைப்பட வாழ்க்கையில் இன்னும் மிச்சமிருப்பது.
மற்றபடி திருமணத்துக்குப் பிறகு நடிக்கக் கூடாது என்றெல்லாம் என் கணவர் கண்டிஷன் எதுவும் போடவில்லை. நடிக்க வேண்டாம் என்பது நான் எடுத்த முடிவுதான். பார்க்கலாம்... முதலில் அவருடன் இருந்து அவருக்கு ஏற்ற கதாநாயகியாக திருப்தி தர விரும்புகிறேன். மறுபடி நடிக்க வருவேனா என்று இப்போதே கூற முடியாது என்றார்.
ஆல் த பெஸ்ட் கோபிகா!


Click it and Unblock the Notifications











