Don't Miss!
- Sports போதும் டா! சாமி.. ரவீந்திராவை நம்பி ஏமாந்த சிஎஸ்கே.. கெத்தாக தொடங்கி சொத்தையாக மாறிய கதை
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தமிழில் நடிப்பது குஷி - ஹேமமாலினி
தமிழ் சினிமாவுக்குக் கிடைத்துள்ள புதிய கவர்ச்சி தாரகை ஹேமமாலினி. இந்திர விழாவில் திருப்திகரமாக கவர்ச்சி காட்டினார். நான் அவன் இல்லை-2 படத்திலும் சிறப்பாக நடித்து வருகிறாராம். அடுத்து சுந்தர்.சியுடன் குரு சிஷ்யனில் இணைகிறார். இதிலும் நிச்சயம் கவர்ச்சி விருந்து படைப்பார் என நம்பலாம். காரணம் படத்தை இயக்கப் போவது மசாலா பட மன்னன் ஷக்தி சிதம்பரம் என்பதால்.
மும்பை ஸ்டார்கள் என்று கூறி அலுத்துப் போனவர்களுக்கு ஒரு ஆறுதல். ஹேமா, புனேவைச் சேர்ந்தவர். ஏற்கனவே இதே புனேவிலிருந்துதான் அனுயா வந்து இறங்கி சிவா மனசுல சக்தி, மதுரை சம்பவம் என பிசியாகியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
ஹேமமாலினி இனிமேல் தனது ஒரிஜினல் பெயரான ஸ்ருதி பிரகாஷ் என்ற பெயரிலேயே நடிக்கப் போகிறாராம். அவருக்கு எதுவாக இருந்தாலும் ஒரிஜினலாக இருக்க வேண்டுமாம். ஹேமமாலினி இந்தியாவின் கனவுக் கன்னி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த கனவுக் கன்னியின் புகழை வைத்து நானும் ஓசியில் புகழ் பெற விரும்பவில்லை என்கிறார் ஹேமா.
ஹேமமாலினிக்கு தமிழ் சினிமாவை ரொம்பப் பிடித்து விட்டதாம். குறிப்பாக ரசிகர்கள். இங்குள்ள ரசிகர்கள் வித்தியாசமானவர்களாக இருக்கிறார்கள். நடிகர்கள், நடிகைகளைப் பிடித்து விட்டால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். அது மகிழ்ச்சியாக உள்ளது.
தமிழ் ரசிகர்களையும் தமிழ் சினிமாவையும் எனக்கு ரொம்பப் பிடித்து விட்டதால் தொடர்ந்து தமிழிலேயே நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்கிறார் குஷியாக.
அப்ப அடுத்த கோவிலுக்கான 'பேஸ்மென்ட்'டை ரெடி பண்ணுங்கப்பா ரசிக 'மேஸ்தி'ரிகளா...!