சினிமாவுக்கு முழுக்குப் போடுவது குறித்து முடிவெடுக்கவில்லை-நயனதாரா

By Sudha

Nayanthara
இதுவரை சினிமாவுக்கு முழுக்கு போடுவது குறித்து நான் முடிவே எடுக்கவில்லை. ஆனால் நான் பிரபுதேவாவை மணந்த பின்னர் சினிமாவில் நடிக்கக் கூடாது என்று பிரபுதேவா கூறியுள்ளதாக தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள் என்று விசனம் தெரிவித்துள்ளார் நடிகை நயனதாரா.

நடிகர் பிரபுதேவாவுக்கு விரைவில் இரண்டாம் தாரமாகவுள்ளார் நயனதாரா. திருமணத்திற்கான ஏற்பாடுகள் விரைவாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பின்னர் நயனதாரா நடிக்கக் கூடாது என்று பிரபுதேவா உத்தரவிட்டுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

ஆனால் இதை மறுத்துள்ளார் நயனதாரா. இதுகுறித்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

சமீபத்தில் ஒரு தெலுங்கு பத்திரிகையில் திருமணத்துக்குப்பின் நான் சினிமாவில் நடிக்க மாட்டேன், ராமாயணம் தான் எனது கடைசி படம் தொடர்ந்து சினிமாவில் நடிக்கக் கூடாது என்று பிரபுதேவா சொல்லி இருப்பதாகவும் செய்தி வெளியானது. அந்த தகவல்களை நான் சொன்னதாக வெளியிட்டு இருந்தார்கள்.

அது போல் நான் தெலுங்கு பத்திரிகைக்கு பேட்டி கொடுக்கவே இல்லை. நான் சொல்லாததையெல்லாம் சொன்னதாக போட்டு என்னைப்பற்றி தவறான வதந்தியை பரப்புகிறார்கள்.

அந்த பேட்டியை படித்து பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. அவர்களாக கற்பனையாக எழுதி இருக்கிறார்கள். அந்த பத்திரிகையில் இருந்து யாரும் என்னை சந்திக்கவே இல்லை. சினிமாவுக்கு முழுக்கு போடுவது பற்றி நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன்.

என்னைப் பற்றி இது போல் பல தகவல்கள் பத்திரிகைகளில் வெளிவருகிறது. ஆனால் நான் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை என்று கூறியுள்ளார் நயனதாரா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X