கவர்ச்சிக்கு கட்டுப்பாடு இல்லை-நயனதாரா

ஐயா படம் மூலம் அறிமுகமான நயன்தாரா தமிழ், தெலுங்கில் 22 படங்களைத் தாண்டி விட்டார். ஹைதராபாத்தில் அவர் நிருபர்களைச் சந்தித்தார்.
உங்களைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகிறதே?
நான் அதுபற்றி கவலைப்படக்கூட எனக்கு நேரமில்லை. ஆரம்பத்தில் கிசுகிசுக்கள் என் மனதை காயப்படுத்தின. இப்போது பக்குவப்பட்டுவிட்டேன்.
யாரோ சில வேலையற்றவர்கள்தான் கிசுகிசுக்களைப் பரப்பி வீண் வேலையில் ஈடுபடுகிறார்கள், எனக்கு நிறைய வேலை இருக்கிறது. எனவே அதை பொருட்டாக நினைப்பதில்லை. நான் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வருகிறேன். அதுவும் இது போன்ற கிசுகிசுக்களுக்கு காரணமாக இருக்கலாம்.
பெரிய நடிகர்களுடன் நடிக்கிறீர்களே?
நிச்சயம் அது என் அதிர்ஷ்டம்தான். முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டேன். ரஜினியுடன் சந்திரமுகியில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். தமிழ் படங்களில் பிசியாக நடிக்கிறேன். தெலுங்கிலும் நிறைய படங்களில் நடிக்கிறேன்.
கவர்ச்சி வேடங்களுக்குதான் முக்கியத்துவம் தருகிறீர்கள். ஏன்?
சினிமா என்பதே கிளாமர் உலகம்தானே. நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதை இயக்குனர்கள்தான் முடிவு செய் கிறார்கள். கேரக்டருக்கு ஏற்ற மாதிரி நடிக்கிறேன். கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்ற கட்டுப்பாடு என்னிடம் இல்லை. தயாரிப்பாளர், இயக்குனர், என் கேரக்டர் போன்றவற்றை பொருத்து ஒரு படத்தில் எப்படித் தோன்ற வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறேன்.
தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடனும் மலையாளத்தில் பாடிகாட் படத்திலும் நடிக்கிறேன். ஏற்கனவே நான் நடித்த டொவன்டி டொவன்டி மலையாள படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. நலிந்த நடிகர்களுக்கு உதவு வதற்காக அப்படத்தை எடுத்தனர். அந்த படம் வெற்றி பெற்றது சந்தோஷம் என்றார்.


Click it and Unblock the Notifications











