சுறாவில் வருவதுபோல நான் முட்டாள் பெண் அல்ல! - தமன்னா
நான் நடித்து வெளியாகும் படங்களை போஸ்ட் மார்ட்டம் செய்து பார்ப்பதில்லை. அடுத்த படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவேன். இதுதான் என் ஸ்டைல் என்கிறார் தமன்னா.
தில்லாலங்கிடி படப்பிடிப்பு இடைவேளையில் தமன்னா அளித்த பேட்டி:
சுறா படத்தில் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். ஆனால் அந்தப் படம் எப்படிப் போகிறது என்றெல்லாம் நான் கவலைப்படவில்லை. அதில் நான் என்ன செய்திருக்கிறேன் என்று கூட ஆராய விரும்பவில்லை. இதுபோன்ற போஸ்ட் மார்ட்டத்தை நான் ஒருபோதும் விரும்புவதில்லை. அந்தப் படம் முடிந்ததும் அடுத்த படம்... இதுதான் என் பாணி.
என்னைப் பற்றிய விமர்சனங்கள் நல்லதோ கெட்டதோ.. எதுவாக இருந்தாலும் ஏற்கிறேன்.
சுறாவில் காணாமல் போன நாய்க்காக தற்கொலை செய்து கொள்ளத் துணியும் பெண் வேடத்தில் நான் நடித்திருந்தேன். ஆனால் நிஜத்தில் நான் அந்த அளவுக்கு முட்டாள்தனமான பெண் அல்ல. நான் மிகத் துணிச்சலானவள்.
இப்போது நான் பிஸியாக இருக்கிறேன். முன்னணியில் உள்ளேன் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் இப்போது நான் செலக்டிவாக படங்களை ஒப்புக் கொள்ள முடியாது. வருகிற நல்ல வாய்ப்புகளை ஒப்புக் கொள்வதே புத்திசாலித்தனம். அது எப்படிப்பட்ட வேடம், எனக்கு முக்கியத்துவம் உள்ளதா என்றெல்லாம் பார்க்க முடியாது," என்றார்.


Click it and Unblock the Notifications











