Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'குவார்ட்டர் கட்டிங்' பட டைட்டிலுக்கு சபாஷ் விளக்கம்
குவார்ட்டர் கட்டிங் என்று படத்திற்குப் பெயர் வைத்த பின்னர் கேளிக்கை வரி விலக்கு சலுகையையும் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக அந்தத் தலைப்புக்கு முன்னால் பெரிதாக 'வ' என்ற எழுத்தைப் போட்டு சமாளித்துள்ளனர் காயத்ரி-புஷ்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள குவார்ட்டர் கட்டிங் படக் குழுவினர்.
இப்படத்தை தயாரித்திருப்பது தயாநிதி அழகிரி. எனவே பெரிய அளவில் விதிமுறைகள் பார்க்கப்படாது என படக் குழுவினர் நினைத்திருக்கலாம். இருந்தாலும் குற்றம் சாட்டி விரல்கள் நீண்டு விடுமே என்ற யோசனையில் குவார்ட்டர் கட்டிங் டைட்டிலுக்கு மேலே 'வ' என்ற எழுத்தைப் போட்டு விட்டனர்.
அதென்ன வித்தியாசமான தலைப்பாக இருக்கிறதே என்று இயக்குநர்களான புஷ்கர்-காயத்ரியிடம் கேட்டால்,
'வ' என்பதற்கு என்ன அர்த்தம் என பலரும் யோசித்திருப்பீர்கள். தமிழ் அகராதிப்படி 'வ' என்றால், ஒன்றின் கீழ் நான்கு என்று அர்த்தம். அதாவது கால் பங்கு என்று பொருள். இதை ஆங்கிலத்தில் சொன்னால் குவார்ட்டர் தானே, அதான் இந்த படத்திற்கு 'வ' என்று தலைப்பு வைத்துவிட்டோம் என்றனர்.
'வ' என்பது தமிழில் கால் என்று பொருள் வரும் வார்த்தைதானா என்பதை தமிழறிஞர்கள்தான் விளக்க வேண்டும்.
கேளிக்கை வரி விலக்கு என்ற தமிழக அரசின் சலுகைக்கு ஆரம்பத்தில் நல்ல மரியாதை இருந்தது. உண்மையான தமிழ்ப் பெயர்களை நல்ல பெயர்களை வைக்க ஆரம்பித்தனர் தயாரிப்பாளர்கள். ஆனால் இப்போது பழைய குருடி கதவைத் திறடி கதையாகியுள்ளது.
போடா போடி என்று ஒரு படம், தில்லாலங்கடி என்று ஒரு படம், இப்போது குவார்ட்டர் கட்டிங் என்று நன்றாக பிரபலப்படுத்தி விட்டு 'வ' என்ற ஒரு எழுத்தைப் போட்டு ஒரு படம் என தமிழ் சினிமா தன் போக்கில் போய்க் கொண்டுதான் உள்ளது.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!