நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் வெற்றிக்காக பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஓட்டலில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில், படத்தின் நாயகன் சிலம்பரசன், திரிஷா, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இதில் நிருபர்களுக்கு த்ரிஷா அளித்த பேட்டி:
சில நடிகைகள் ஆசிரமத்துக்கு சென்று சாமியாரிடம் ஆசி பெற்று வருகிறார்களே? நீங்கள் எந்த ஆசிரமத்துக்காவது சென்றிருக்கிறீர்களா?
அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் ஆசிரமங்களுக்கு நான் போனதில்லை. இனிமேல் நான் போகமாட்டேன். நான் சாமியைத்தான் நம்புவேன், சாமியார்களை நம்புவதில்லை. கடவுளுக்கும், மனிதர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.
அதெப்படி ஒரு சாதாரண மனிதன் கடவுளாக முடியும்... மனிதர்களை கடவுளாக நினைத்து காலில் விழுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.
விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் முத்தக்காட்சியில் நடித்திருக்கிறீர்களே?
கதைக்கு அது தேவைப்பட்டது. அதனால் நான் நடித்தேன்.
படத்தில் சிலம்பரசனைவிட, வயதில் மூத்த பெண்ணாக நடித்திருக்கிறீர்களே?
அதற்காக நான் டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனனுடன் சண்டை போட்டேன். அவர், என்னை சமாதானப்படுத்தினார்.
அப்படி ஒரு காம்பினேஷன் நல்ல க்யூட்டாகவும் இருந்தது. அதனால் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
கேரள கிறிஸ்தவப் பெண்கள் யாரையாவது பார்த்து அவர்கள் பழக்க வழக்கங்களை கற்றுக் கொண்டீர்களா?
இல்லை. கௌதம் மேனன் சொன்னதைக் கேட்டு நடித்தேன். அவர் சொன்ன சில விஷயங்களில் எனக்கு முதலில் சம்மதமில்லை. ஆனால் கடைசியில் அவர் சொன்னதுதான் ஜெயித்தது, என்றார் த்ரிஷா.


Click it and Unblock the Notifications