இனி ஆண்டுக்கு ஒரு படம் தருவேன்! - பாலா

பின்னர் தனக்கு அறிமுகமான பத்திரிகையாளர்களிடம் சிறிது நேரம் பேசினார்.... அல்ல... பேசச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தார்.
ஒருவர், 'சார் உங்க மேல எனக்கு பயங்கர கோபம்... அடிக்கடி படம் கொடுங்க. இப்படி 3 வருசம் நாலு வருசம் காக்க வைக்காதீங்க!', என்றார் உரிமையுடன்.
சற்று நேரம் தனக்கே உரிய புன்முறுவலுடன் அமைதிகாத்த பாலா, பின்னர் இப்படிச் சொன்னார்:
லேட்டா கொடுக்கணும்னு நானும் நினைக்கல. அப்படி அமைஞ்சிடுச்சி. ஆனா அடுத்த படத்தை 6 மாதங்களுக்குள் துவங்குவேன். அதற்கடுத்த ஆறு மாதங்களில் ரிலீஸ் செய்துவிடுவேன்... உங்க கோபத்தையெல்லாம் தீர்க்கும் விதத்தில் இருக்கும் அந்தப் படம் என்றார்.
பாலா சாதாரணமாகப் பேசுகிற ரகமில்லை... கொடுத்த வார்த்தையைக் காப்பார் என்ற நம்பிக்கைக் கொள்வோம்.
காரணம் பாலா மாதிரி சிலர்தானே தமிழ் சினிமாவுக்கு அவ்வப்போது ஆக்ஸிஜன் ஏற்றுகிறார்கள்!
Comments


Click it and Unblock the Notifications