பாலிவுட்டுக்கு என் மீது பொறாமை - பிரியதர்ஷன்

Priyadarshan with Sameera Reddy
நான் தென்னிந்தியாவைச் சேர்ந்தவன் என்பதால் பாலிவுட்டுக்கு என் மீது மிகுந்த பொறாமை. அதனால்தான் காமெடிப் படம் எடுக்கவும், ரீமேக் படங்களை எடுக்கவும் மட்டுமே லாயக்கு என்று முத்திரை குத்தி வைத்துள்ளனர் என்று புலம்பியுள்ளார் இயக்குநர் பிரியதர்ஷன்.

காஞ்சிவரம் படத்துக்காக தேசிய விருது பெற்றுள்ள பிரியதர்ஷன் பாலிவுட் திரையுலகம் மீது பாய்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பிரச்சினை என்னவென்றால், துதிர்ஷ்டவசமாக நான் இந்தியில் வெற்றி பெற்று விட்டேன். இந்திய சினிமா வரலாற்றிலேயே இந்தியில் வெற்றி பெற்ற ஒரே தென்னிந்திய இயக்குநர் நான்தான்.

கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக இங்கு நான் படம் இயக்கி வருகிறேன். இதுவரை 25 படங்களை இந்தியில் இயக்கியுள்ளேன்.

இதனால் இங்குள்ள பலருக்கு என் மீது பொறாமை ஏற்பட்டுள்ளது. எனது பெயரைக் கெடுக்கும் வகையில் அவர்கள் நடந்து கொள்கிறார்கள். அதில் ஒன்றுதான் காமெடி மற்றும் ரீமேக் படங்களை மட்டுமே நான் இயக்க முடியும் என்ற முத்திரை.

கமர்ஷியல் படங்கள் எடுப்பது ஒன்றும் சாதாரண வேலை கிடையாது. ஆஃப் பீட் படங்களைக் காட்டிலும் கமர்ஷியல் படங்கள் சற்று கடினமானவை என்றார் பிரியதர்ஷன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X