பாரதியின் 'நவீன பாஞ்சாலி'யாக ரோகிணி!!

கணவர் ரகுவரனின் மரணத்துக்குப் பின் மகனே உலகமாய் வாழ்ந்து வரும் ரோகிணி தனது நாடக ஆர்வம் குறித்து கூறுகையில்,
நடிகைகள் அனைவருக்கும் சினிமாவில் இருந்து விலககூடிய நிலைமை ஒரு நாள் நிச்சயம் ஏற்படும். அப்போது அவர்கள் சமூகப் பணி, தொலைகாட்சித் தொடர், காம்பியரிங் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். அது போல தான் நான் மேடை நாடகங்களில் நடித்து வருகிறேன்.
நான் சினிமாவில் இருந்து விரைவில் விலகுவதற்கு என் மகனும் ஒரு காரணம். அவனது அருகில் இருந்து அவனை நானே வளர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அவனை சமுதாயத்தில் சிறந்தவனாக உருவாக்குவேன். அவனை பார்த்து கொள்ள வேண்டியிருப்பதால் சென்னை தவிர்த்து வேறு எங்கு படப்பிடிப்பு நடத்தினாலும் என்னால் போக முடியாது.
கண்ணாபிரான் கூத்து குழுவினரின் பெண் ஒளி என்ற நாடகத்தில் நவீன பாஞ்சாலியாக நடித்தேன். சமீபத்தில் இந்த நாடகம் சென்னையில் நடந்தது. இனி வரும் காலங்களிலும் அந்த நாடகம் தொடரும். இந்த நாடகம் பாரதியார் எழுதிய பாஞ்சாலி சபதத்தைக் அடிப்படையாகக் கொண்டது என்றார்.
சூப்பர் ரோகிணி!!.


Click it and Unblock the Notifications











