twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அவார்டு படங்களில் நடிப்பார் விஜய்!-எஸ்.ஏ.சந்திரசேகரன்

    By Sridhar L
    |

    Vijay
    அடுத்த ஆண்டு முதல் அவார்டு படங்கள் மற்றும் வித்தியாசமான கெட்டப்புகளில் நடிப்பார் விஜய் என அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியுள்ளார்.

    திண்டுக்கல் மாவட்டம்,​​ ஆத்தூர் அருகே காமராஜர் சாகர் அணைக்கட்டில் நடிகர் விஜய் நடிக்கும் படப்பிடிப்புக்காக,​​ இயக்குநர் சந்திரசேகர் வந்திருந்தார்.​

    அப்போது,​​ அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், "ரஜினியின் பார்முலாவைத்தான் விஜய் பின்பற்றுகிறார்.​ ரஜினியின் படங்கள் எல்லாம் வெற்றிப் படங்கள். அதேபோல்,​​ என் மகன் விஜய் படங்களும் வசூலில் வெற்றி பெற்று வருகின்றன.

    விஜய் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் யாரும் இதுவரை நஷ்டம் அடைந்ததில்லை.​ வேட்டைக்காரன் படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.​​

    விஜய் வித்தியாசமான படங்களில், வேடங்களில் நடிப்பது குறித்து யோசித்து வருகிறார். 2011ம் ஆண்டுக்குப் பிறகே விஜய் நடிக்கும் அவார்டு படங்கள் தயாரிக்கப்படும் என்றார் அவர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X