உருமி? மறுக்கும் ஆர்யா!
சந்தோஷ் சிவன் இயக்கும் உருமி படத்தில் நான் நடிப்பதாக வந்த செய்திகளில் உண்மையில்லை, என்றார் ஆர்யா.
உறுமி என்கிற படத்தை சந்தோஷ்சிவன் இயக்குகிறார். பிரபு தேவா, ப்ருத்விராஜ் நடிக்கும் இந்தப் படத்தில் ஆரியா, ஒரு கவுரவ வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாயின.
ஆனால் உறுமியில் நான் நடிக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சந்தோஷ்சிவன் படங்களில் நான் நடிக்க ஆர்வமாக உள்ளேன். அவர் படங்களில் நடிப்பதன் மூலம் உலக அளவில் அங்கீராம் கிடைக்கும் என்பது உண்மைதான். ஆனால் இந்த உருமி படத்தில் நான் நடிக்கவில்லை.
பாலாவின் அவன் இவன் படத்தில் உள்ள டப்பிங் வேலைகள் முடிந்தபின் நான் வெளிநாடு செல்லவிருக்கிறேன்.
சில நாட்கள் அங்கு இருந்துவிட்டு மார்ச் 2-ந் தேதி திரும்புகிறேன். அதன்பின் லிங்குசாமி இயக்கத்தில் வேட்டை என்ற படத்தில் மாதவன், சமீராவுடன் நடிக்கவுள்ளேன்..., என்றார்.


Click it and Unblock the Notifications











