அமீர்கான் எனக்கு வீடு கொடுத்ததாக கூறுவது பொய் - அசின்

கஜினி என்ற ஒரே இந்திப் படம் மூலம் முதல்நிலை நடிகையாகிவிட்ட அசினுக்கும், அந்தப் படத்தின் நாயகன் அமீர்கானுக்கும் நெருக்கமான உறவு இருப்பதாகவும், அவரது கட்டுப்பாட்டில்தான் அசின் இருப்பதாகவும் செய்திகள் கசிந்தன.
இந்த நிலையில் அசின் மும்பையில் தனி வீடு ஒன்றை பெரும் தொகைக்கு வாங்கியுள்ளார். முன்பிருந்த அபார்ட்மெண்டை காலி செய்துவிட்டு இந்த புதிய வீட்டுக்குப் போய்விட்டாராம். இந்த வீட்டை அவருக்கு வாங்கிக் கொடுத்ததே அமீர்கான்தான் என்றும் கூறப்பட்டது.
இதுகுறித்து சமீபத்தில் அசினிடம் கேட்கப்பட்டது:
"ஏன்தான் தொடர்ந்து என்னைப் பற்றி இப்படியெல்லாம் எழுதுகிறார்களோ தெரியவில்லை. முன்பு சல்மான்கானுடன் இணைத்து எழுதினார்கள். இப்போது அமீர்கானுடன் இணைத்துப் பேசுகிறார்கள். இதற்கு ஒரு முடிவே இல்லை போலிருக்கிறது.
இது என் சொந்த வீடு. நான் சம்பாதித்த பணத்தில் வாங்கியது. யாரும் எனக்கு வாங்கித் தரவில்லை. என் வசதிக்காகத்தான் மும்பையில் இருக்கிறேன். அமீர்கானுக்காக இல்லை. அவருக்கும் எனக்கும் அந்த உறவும் இல்லை. அவர் என் முதல்பட ஹீரோ, அவ்வளவுதான். அத்துடன் அதை மறந்துவிட்டேன். இப்போது லண்டன் ட்ரீம்ஸில் பிஸியாக இருக்கிறேன்...." என்றார் அசின்.


Click it and Unblock the Notifications











