'டூ பீஸுக்கு' கூட கேட்கும் நமீதா

By Staff

Namitha
நான் சம்பளம் அதிகம் கேட்பது உண்மைதான். டூ பீஸில்தான் நான் நடிக்க வேண்டும் என நிர்பந்திப்பவர்களிடம் அதிக சம்பளம் கேட்பதில் தப்பில்லை, என்கிறார் நமீதா.

நமீதா அதிக சம்பளம் கேட்பதாகவும், திரைப்படங்களை விட புடவைக்கடை, நகைக்கடை திறப்புகளுக்கே அதிகம முக்கியத்துவம் தருவதாகவும் தமிழ்ப் பட தயாரிப்பாளர்கள் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு நமீதா கூறிய பதில்:

பெரும்பாலான இயக்குநர்கள் என்னைக் கவர்ச்சியாகக் காட்டினால் போதும் என்றுதான் நினைக்கிறார்கள். யாரும் நடிக்க வைக்க முயற்சிக்கவில்லை.

புடவை கட்டிக் கொண்டு நான் நடிப்பதையே இங்குள்ளவர்கள் விரும்பவில்லை. போகிற போக்கில் நான் புடவை கட்டுவதையே மறந்துவிடுவேன் போலிருக்கிறது.

டூபீஸ் உடைகள், தொடை மற்றும் இடுப்பைக் காட்டுவது போலத்தான் காஸ்ட்யூம் இருக்க வேண்டும் என்கிறார்கள். அவர்களிடம் குறைந்த சம்பளமா கேட்க முடியும். என்னை வைத்து சம்பாதிக்கிறார்கள். அவர்களிடம் அதிக சம்பளம் கேட்பதில் என்ன தவறு என்கிறார் நமீதா.

புடவைக் கடை, நகைக்கடை திறப்புக்குப் போவதில் நிறைய வருமானம் இருப்பது உண்மைதான் என்றும், ஒரு படத்தில் நடிப்பதை விட சுலபமாகவும், கண்ணியமாகவும் இருப்பதாகவும் நமீதா தெரிவித்துள்ளார்.

தமிழ் பட உலகில் எல்லோரும் போலியாகவே தன்னிடம் நடந்து கொள்வதாகவும் குறைப்பட்டுக் கொண்டுள்ளார்.

சொல்லிட்டீங்கல்ல... 'ப்பூ... இவ்ளோதானா... வாங்க நிஜமா பழகிப் பார்க்கலாம்னு' இனி கூப்பிடப் போறாங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X