அசின் இடம் எனக்கா... ஹய்யோ! - ஓவியாவின் குஷி!

By Chakra

தமிழில் அசின் இடத்தில் என்னை வைத்துப் பார்ப்பதாக நிறைய பேர் சொல்கிறாகள்... கேட்கவே சந்தோஷமாக உள்ளது, என்கிறார் ஓவியா.

களவாணி என்ற ஒரே படத்தில் முன்னணி நடிகையானவர் ஓவியா. அவரது அடுத்த படமே கமலுடன் நடிப்பதாக அமைந்தது. மன்மதன் அம்பு படத்தில் முக்கிய பாத்திரத்தில் சில காட்சிகளில் வருகிறாராம்.

இப்போது செவனு படத்தில் நடிக்கும் ஓவியாவை, தனுஷ் உள்ளிட்ட முக்கிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கக் கேட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில், நடிப்பிலும் அழகிலும் அசின் இடத்தைப் பிடித்துள்ளவர் ஓவியாதான் என்று ஒரு பத்திரிகையில் இவரைப் பற்றி எழுத, உற்சாகத்தில் மிதக்கிறார் ஓவியா.

"ஹய்யோ... கேட்கும்போதே பறக்கிற மாதிரி இருக்கு. ஆனால் அசின் இன்னும் தமிழில் நடிக்கிறார். பெரிய நடிகை. அப்படியிருந்தும், என்னை அவருடைய இடத்தில் வைத்துப் பார்ப்பது பெருமையாக உள்ளது. கமல் படத்தில் நடித்தது பெரிய அதிர்ஷ்டம். எனக்கு இரண்டாவது படத்திலேயே அப்படி ஒரு பாக்கியம் கிடைக்கும் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை" என்கிறார்.

"அசின்னு சொல்லிட்டதுக்காக, சிலோன் பக்கம் போயிடாதீங்க... அப்புறம் உங்க இடத்துக்கு வேற ஆள் தேட வேண்டியிருக்கும்.." என்று அவரிடம் சொல்லி வைத்திருக்கிறார்களாம் நெருக்கமான பத்திரிகையாளர்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X