'பொய் சொல்ல போறாம்'-விஜய்

தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தருமான ஏ.எல் அழகப்பனின் வாரிசான விஜய் பிரியதர்ஷனின் பிரதம சீடர். தன் குருவுக்காக அவர் எடுத்திருக்கும் படம் இது. முதல் படம் கிரீடம் எதிர்பார்த்த அளவு வெற்றியைக் கொடுக்கவில்லையென்றாலும், ஒரு சிறந்த இயக்குநர் நல்ல பெயரை விஜயக்குப் பெற்றுத் தந்தது.
தனது இண்டாவது படத்தை முற்றிலும் வித்தியாசமான ஒரு களத்தில் கொடுத்திருக்கிறார் விஜய்.
பல புதுமுகங்கள், சில டிவியில் பார்த்த முகங்கள், சில பழைய முகங்கள் என ஆட்களை வைத்து முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக இதை உருவாக்கியிருக்கிறார்.
இதுகுறித்து விஜய் கூறுகையில், வியாபார ரீதியில் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் வித்தியாசமாக இருக்கும். நாசர் இந்தப் படத்துக்கு மிகப் பெரிய பலம். மலையாள நடிகர் நெடுமுடி வேணு நடித்திருக்கிறார். அவருக்கு நடிகர் ராஜேஷ், குரல் கொடுத்துள்ளார். குடும்பத்துடன் பார்க்கத்தக்க நல்ல பொழுதுபோக்குப் படமாக இருக்கும் பொய் சொல்லப் போறோம், என்கிறார்
இந்தப் படத்தையடுத்து இந்தியிலும் ஒரு படத்தை இயக்க ஒப்புக் கொண்டுள்ளார் விஜய். கதாநாயகன் ரன்பீரா இம்ரானா என்பது மட்டும் இன்னும் முடிவாகவில்லையாம்.


Click it and Unblock the Notifications











