மகனை தமிழிலும் பாட வைப்பேன்- ரகுமான்

சரிகம ஆடியோ நிறுவனம், 'ஊலலலா' எனும் இசை ஆல்பத்தை தயாரித்துள்ளது. இதன் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆல்பத்தின் முதல் பிரதியை வெளியிட, இயக்குநர் கவுதம் மேனன் பெற்றுக்கொண்டார்.
விழாவில் ஏ.ஆர்.ரகுமான் பேசும்போது, இந்த ஆல்பத்தில் பாடியவர்களுக்கும், இசையமைத்தவர்களுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஒற்றுமையாக இருங்கள். சந்தோஷமாக இருங்கள், என்றார்.
பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:
உங்கள் மகன் ஒரு 'ஹாலிவுட்' படத்தில் பாடியிருக்கிறான். அவனை தமிழ் படத்திலும் பாட வைக்கும் எண்ணம் இருக்கிறதா?
என் மகன் ஆலிம் ரஹ்மானுக்கு ஆறரை வயது ஆகிறது. இப்போதுதான் இசை கற்று வருகிறான். ஹாலிவுட் படத்தில், ஒரு பாட்டு பாடியிருப்பது உண்மைதான். அடுத்து தமிழ் படத்திலும் அவனை பாட வைக்கும் எண்ணம் இருக்கிறது. நிச்சயமாக தமிழ் படத்தில் பாடுவான், என்றார் ரஹ்மான்.
நிகழ்ச்சியில் சரிகம நிறுவனத்தின் பிஆர் விஜயலட்சுமி, கமல்ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசன் மற்றும் நடிகை ஆண்ட்ரியா ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை நிகில் முருகன் செய்திருந்தார்


Click it and Unblock the Notifications











