ஷீலா மலையாளத்தில் பிசி!

குழந்தை நட்சத்திரமான ஷீலா இப்போது பூத்துக் குலங்கும் புது மலர். இளவட்டம் படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். கவர்ச்சிக்கு தடை போடாமல் நடிக்கவம் தயாராகவும் இருப்பவர்.
தமிழிலும், தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ள ஷீலாவுக்கு இன்னும் பிரேக் கிடைத்த பாடில்லை. இதனால் தனது ஜாகையை மலையாளத்திற்கு மாற்றியுள்ளார் ஷீலா.
அவர் நடித்த மாயாபஜார் படம் ஹிட் ஆனதால் மலையாளத்தில் ஷீலாவுக்கு மார்க்கெட் கிடைத்துள்ளது.
மம்முட்டியுடன் நடித்த மாயா பஜார் ஹிட் ஆகியுள்ளது பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளதாக கூறும் ஷீலா, தொடர்ந்து மலையாளத்தில் நடிக்க ஆர்வமுடன் இருப்பதாக கூறுகிறார்.
தமிழ், தெலுங்குக்கு குட்பையா என்று கேட்டால், அப்படியெல்லாம் இல்லை, அங்கும் நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் கண்டிப்பாக வருவேன் என்கிறார் கன்னக்குழி தெரிய சிரித்தபடி.
Comments


Click it and Unblock the Notifications