நீச்சல் உடைது ஏன்?-ஸ்ருதி கமல்

லக் இந்திப் படத்துக்காக தென்னாப்பிரிக்காவில் வைத்து படமாக்கப்பட்ட இந்தக் காட்சிகள் தொடர்பான புகைப்படங்களை இதுவரை ரகசியமாக வைத்திருந்தனர் படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும். ஆனால் இப்போது, இணையத்தில் அந்தப் படங்கள் உலா வருகின்றன.
இனி இது குறித்து மறைத்துப் பேசுவதில் பயனில்லை என்ற உண்மை புரிந்ததாலோ என்னமோ ஸ்ருதியும் வெளிப்படையாக அதுகுறித்த பேட்டியையும் அளித்துள்ளார். இந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
"லக் எனது முதல் படம் மட்டுமல்ல, சந்தோஷமான அனுபவமும் கூட. ஒரு புது கதாநாயகிக்கு முதல் படத்தில் திறமையை காண்பிக்க வாய்ப்புகள் அமையாது. அந்த வகையில், நான் அதிர்ஷ்டசாலி. இந்த படத்தில் என் திறமைகளை காண்பிக்க ஏகப்பட்ட வாய்ப்புகளைக் கொடுத்தார்கள் இயக்குநரும் ஹீரோவும். அருமையான தயாரிப்பாளர்.
'லக்' படத்தில் நான் நீச்சல் உடையில் நடித்து இருக்கிறேன். கதைக்கு அவசியம் என்பதால், அந்த காட்சியில் நடித்தேன். நீச்சல் காட்சியில் நடிப்பது குறித்து அப்பாவிடம் எதுவும் நான் கூறவில்லை. அதை என் பொறுப்பிலேயே விட்டுவிட்டார் அவர்.
சண்டை காட்சிகள்..
இந்த படத்தில் எனக்கு சண்டை காட்சிகளும் உள்ளன. இதற்காக நிறைய பயிற்சி எடுத்து நடித்தேன். கதாநாயகன் இம்ரான், மற்றும் எங்களுடன் நடித்த சஞ்சய்தத், மிதுன்சக்ரவர்த்தி ஆகியோரும் என்னை பாராட்டினார்கள். ஆனால் இதெல்லாம் அப்பாவின் பெயர், அவர் மீதுள்ள மரியாதை காரணமாக வந்ததென்பது எனக்கும் தெரியும்", என்றார் ஸ்ருதி.


Click it and Unblock the Notifications











