எனது லுக் நல்லாருக்கணும்-சொல்கிறார் பியா
நான் திரையில் எப்படித் தோன்றுகிறேன், என்னை ரசிகர்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பது எனக்கு முக்கியம். எனவே எனது தோற்றம் பொலிவோடு இருக்கிறதா என்பதை கவனமாக பார்த்துக் கொள்கிறேன் என்கிறார் கோவா பெண் பியா.
பொய் சொல்லப் போறோம் படம்தான் பியாவின் முதல் படம். முதல் படத்திலேயே தனது ஸ்டிரைக்கிங் தோற்றத்தால் ரசிகர்களின் மனதில் லைட்னிங்காக கலக்கினார்.
அடுத்து வந்தது அஜீத்தின் ஏகன். இதில் 2வது நாயகிதான். மெழுகு பொம்மை நயனதாராவுக்கு முன்னால் பியாவின் பேரழகு எடுபடவில்லை என்றாலும் கூட நடிப்புக்காக ரசிக்கப்பட்டார்.
பிறகு வந்தது பலே பாண்டியா. ஆனால் அதில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் புக் ஆன கோவா முந்திக் கொண்டு வந்தது. இந்த படம்தான் பியா தலையில் சரியான வெளிச்சத்தைப் போட்டுக் காட்டி ரசிகர்களிடம் அவரை ஹிட்டாக்கியது.
இப்போது பலே பாண்டியா வந்து விட்டது. இதில் பியா பிய்த்து உதறியிருக்கிறாராம்.
எல்லாஞ் சரி, ஏன் இப்படி நல்ல இடைவெளி விட்டு விட்டு நடிக்கிறீங்க என்று கேட்டால், எனக்கு படம் முக்கியமல்ல, கதைதான் முக்கியம். எனது ரோல் ஏதாவது ஒரு வகையில் பேசப்பட வேண்டும். சும்மா வந்து டான்ஸ் ஆடி விட்டு கவர்ச்சி காட்டி விட்டு போகப் பிடிக்காது.
என்னை ரசிகர்கள் நன்றாக ரசிக்க வேண்டும். எனதுரோல் அவர்களது மனதில் நிற்க வேண்டும். எனவேதான் நல்ல கதையை தேர்வு செய்து நடிக்கிறேன். அதற்கு டைம் ஆகத்தானே செய்யும் என்கிறார்.
கவர்ச்சியாக நடிப்பீர்களா என்று யாராவது பியாவிடம் போய் கேட்டால், இதெல்லாம் ஒரு கேள்வியா, நடிக்க வந்து விட்டால் நிச்சயம் எல்லா மாதிரியும் நடித்துதான் ஆக வேண்டும் என்கிறார் படு கூலாக.
பியாவுக்கு தனது உடல் அழகும், பொலிவும் ரொம்பமுக்கியமாம். வீட்டை விட்டு வெளியில் வந்து விட்டாலே பளிச்சென தோன்ற வேண்டும் என நினைப்பாராம். எங்காவது மெருகு குறைந்து விட்டது போலத் தோன்றினால் கூட சட்டென சரி செய்ய முயற்சிப்பாராம்.
இவரே ஹேர் ஸைடல், மேக்கப் உள்ளிட்டவற்றைப் பார்த்துக் கொள்கிறார். நமது முகத்தின் அழகு, நமது கைகளுக்குத்தான் நன்றாக தெரியும். எனவே என்னுடைய அழகை நானே பராமரித்துக்கொள்கிறேன் என்கிறார்.
டான்ஸும், ஜிம்மும் பியாவின் இரு கண்கள்.இரண்டில் ஒன்றில் குறைபாடு தெரிந்தாலும் கூட விசனப்பட்டுப் போகிறார். பல விதமான டான்ஸ் பியாவுக்குத் தெரியுமாம். டான்ஸ் சப்ஜெக்ட் கிடைத்தால் பிய்த்து உதறிவிடுவேன் என்கிறார் உபரித் தகவலாக.
ஆனால் நமது ரசிகர்களுக்கு குத்தாட்டம்தான் ரொம்பப் பிடிக்குமாம் பியா...!


Click it and Unblock the Notifications











