பிகினி காட்சிக்கு நான் எப்போ 25 லட்சம் கேட்டேன்? - த்ரிஷா
பாடிகார்ட் படத்தில் பிகினி காட்சியே இல்லை. இதில் நான் ரூ 25 லட்சம் கூடுதலாகக் கேட்டதாக வந்திருக்கும் செய்தியைப் பார்த்து சிரிப்புத்தான் வருகிறது, என்கிறார் நடிகை த்ரிஷா.
விஜய் நடித்த காவலன் படம் தெலுங்கில் பாடிகார்ட் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் நாயகியாக திரிஷா நடிக்கிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக நீச்சல் உடையில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் அதற்காக சம்பளத்தில் கூடுதலாக ரூ. 25 லட்சம் கேட்டதாகவும் தெலுங்கு திரையுலகில் செய்திகள் வெளியாகின
இப்போது இந்த செய்தியை மறுத்துள்ளார் த்ரிஷா. அவர் கூறுகையில், "நான் பிகினி உடையில் நடிக்க சம்மதித்ததாகவும் அதற்கு ரூ.25 லட்சம் சம்பளம் கேட்டதாகவும் வெளியான செய்திகள் ஆதாரமற்ற வதந்திகள். அதை படித்ததும் எனக்கு சிரிப்புதான் வந்தது. மலையாளம் மற்றும் தமிழில் ஏற்கெனவே ரிலீசான இந்த படத்தை பார்த்தவர்களுக்கு அதில் கவர்ச்சி சீன்கள் இல்லை என்பது தெரியும்," என்றார்.


Click it and Unblock the Notifications











