ராணா: வதந்திகளை நம்ப வேண்டாம்... ரஜினி நடிப்பது உறுதி! - முரளி மனோகர்
சென்னை: "ராணா படம் நிறுத்தப்படும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம். இது ரஜினியின் கனவுப் படம். இதில், ரஜினி நடிப்பது உறுதி. வருகிற செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு நடைபெறும்'' என்று அந்த படத்தின் இணை தயாரிப்பாளர் டாக்டர் முரளிமனோகர் கூறியுள்ளார்.
ரஜினியின் உடல்நிலை காரணமாக ராணா படம் ஒரு ஆண்டு தள்ளிப் போகும் என இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் கூறியதாக செய்திகள் வெளியாகின.
எனவே இதுபற்றி ராணா படத்தின் இணை தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:
"சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினிகாந்த் வேகமாக குணம் அடைந்து வருகிறார். அவருக்கு அளிக்கப்பட்ட 'டயாலிசிஸ்' நிறுத்தப்பட்டு விட்டது. இப்போது அவர் அங்கே ஓய்வு எடுத்து வருகிறார். அவருக்கு மேலும் சில வாரங்கள் ஓய்வு தேவைப்படுகிறது.
ராணா படத்தில் ரஜினிகாந்த் நடிப்பது உறுதி. அவர் சிங்கப்பூரில் இருந்து திரும்பியதும், வருகிற செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு நடைபெறும். காரணம் இது ரஜினியின் கனவுப் படம்,'' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











