'மலர் மேல்நிலைப் பள்ளி' ஹசிகா!

'மலர் மேல்நிலைப் பள்ளி' என்ற படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். கன்னடத்தில் ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தனவாம். ஆனால் தமிழில்தான் அறிமுகமாவேன் எனப் பிடிவாதமாக இருந்தாராம் ஹசிகா.
"கன்னடத்தில் பிரபல இயக்குநர்களெல்லாம் அழைத்தார்கள். அப்போதுதான் ஸ்ரீமகேஷ் இந்தக் கதையைச் சொன்னார். அடுத்த நொடியே ஓகே சொல்லி சென்னைக்கு வந்துவிட்டேன்" என்கிறார்.
இந்தப் படத்தில் 12-ம் வகுப்பு மாணவியாக நடிக்கிறாராம். தமிழ் நன்றாகத் தெரியும் என்பதால் வசனம் பேசுவதிலோ காட்சிகளைப் புரிந்து கொள்வதிலோ எந்த கஷ்டமும் இல்லையாம். "தமிழ் நல்லா எழுதப் படிக்க பேசத் தெரியும். அதனால் என்னுடைய சொந்தக் குரலில்தான் டப்பிங் பேசப் போகிறேன்" என்கிறார் ஹசிகா.
தமிழில் இப்போதே அடுத்த படமும் ஒப்பந்தமாகியுள்ளதாம். தெலுங்கிலும் வாய்ப்புகள் வருகின்றனவாம்.
அது என்ன ஹசிகா... ஹன்சிகா என்பதை இப்படி சுருக்கிக் கொண்டாரோ?
"அதெல்லாம் ஒன்றுமில்லை. ஹசிகா என் ஒரிஜினல் பெயர். என் பெயரைப் போலவே ஹன்சிகா பெயர் அமைந்திருக்கிறது. அதில் எனக்கு சந்தோஷம்தான்" என்றார் ஹசிகா.
கோடம்பாக்கத்தின் வெயிட்டாக ஒரு ரவுண்ட் வருவதற்கான அத்தனை தகுதிகளும் அம்மணிக்கு இருக்கு!


Click it and Unblock the Notifications