ஸ்ரேயாவுடன் திருமணமா? - ராணா
ஸ்ரேயாவுடன் திருமணம் என்று தெலுங்குப் பத்திரிகைகளில் வரும் செய்திகளை நம்பாதீர்கள் என்றார் தெலுங்கு நடிகர் ராணா.
பிரபல தெலுங்குப் பட தயாரிப்பாளர் ராமாநாயுடுவின் பேரன் டகுபதி ராணா. தெலுங்கில் முன்னணி நடிகர் இவர்.
இவருக்கும் நடிகை ஸ்ரேயாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கிசுகிசுக்கள் கிளம்பின. தற்போது பிபாசா பாசுவுடன் அவர் நெருக்கமாகிவிட்டதால், ஸ்ரேயாவுடனான காதலை முறித்துக் கொண்டதாகவும் தகவல் பரவியுள்ளது.
இதுபற்றி ராணாவிடம் கேட்டபோது, "ஸ்ரேயாவும் நானும் எட்டு வருடங்களாக நண்பர்களாகத்தான் பழகுகிறோம். எனக்கு மும்பையில் நிறைய நண்பர்கள் உள்ளனர். அவர்களைப் பார்க்க அடிக்கடி செல்வேன். அப்போது ஸ்ரேயாவையும் சந்திப்பதுண்டு.
இதை வைத்து எங்களுக்குள் காதல் என்று கதை கட்டி விட்டனர். எங்களுக்குள் காதல் இல்லை. கல்யாணமும் இல்லை," என்றார்.


Click it and Unblock the Notifications











