என் வயதை எப்போதும் மறைப்பதில்லை!-பாவனா

தமிழ், மலையாளம் இரு மொழிகளிலும் நடித்து வரும் பாவனாவுக்கு இப்போது தெலுங்கிலும் கணிசமான படசங்கள் கதைவசம் உள்ளன. தமிழில் ஜெயம் கொண்டானின் வெற்றி அவர் பக்கம் பெரிய ஹீரோக்களின் கவனத்தைத் திருப்பியுள்ளது.
பாவனா கூறுகையில்,
பெரிய ஹீரோக்களுடன் ஏன் நடிப்பதில்லை எனக் கேட்கிறார்கள். நடிகர்களில் பெரிய, சிறிய நடிகர்கள் என யாரும் இல்லை. நல்ல நடிப்பவர்கள், நல்ல நடிகர்கள். இது நடிகைகளுக்கும் பொருந்தும். படம் நன்றாக இருந்தால் ஓடும். இல்லாவிட்டால் தோல்வி அடையும்.
எனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் கேரக்டர்களையே ஏற்கிறேன். ஹீரோ யார் எனப் பார்ப்பதில்லை. இப்போதும்கூட இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது.
இந்தியில் நடிக்க வேண்டும் என ஒவ்வொரு தென்னிந்திய நடிகைக்கும் ஆசையிருக்கும். எனக்கும் அந்த ஆசையுண்டு. சிந்தாமணி கொலை கேஸ் மலையாள படத்தை பார்த்த ஒரு இந்தி இயக்குனர், அதை ரீமேக் செய்வதாகத் தெரிவித்தார்.
மலையாளத்தில் நடித்த அதே வேடத்தில் இந்தியில் நடிக்கவும் கேட்டார். அப்போது தமிழ்ப் படங்களில் பிசியாக இருந்ததால் முடியவில்லை.
இப்போது எனக்கு 22 வயதாகிறது. இதை வெளிப்படையாக சொல்லாதீர்கள். என சிலர் கூறுகிறார்கள் வயதை மறைப்பதால் என்ன பயன்? நம் வயது முகத்திலேயே தெரிந்துவிடும்.
பெரும்பாலான பெண்கள் வயதை மறைக்கிறார்கள். நடிகைகளும் அதில் அடங்குவார்கள். ஆனால் எல்லா பெண்களும் வயதை மறைப்பதில்லை, அதில் ஒரு பிரயோஜனமும் இல்லை, என்கிறார் பாவனா.
அட...!


Click it and Unblock the Notifications











