முத்தம்: இயக்குநரை 'மொத்தும்' சந்தியா!

By Staff

Sandhya with Bala
மஞ்சள் வெயில் படத்தில் என்னுடைய முத்தக் காட்சி குறித்து செய்தி வெளியிட்டு விளம்பரம் தேடப் பார்க்கிறார் இயக்குநர் வசீகரன் (ராஜா) என பாய்ந்துள்ளார் நடிகை சந்தியா.

பாலா, பிரசன்னா மற்றும் சந்தியா நடித்த மஞ்சள் வெயில் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படம் குறித்து சமீபத்தில் ஒரு செய்தியை பத்திரிகையாளர்களுக்குச் சொல்லியிருந்தார் படத்தின் இயக்குநர்.

அதில், மஞ்சள் வெயில் படத்தில், கதையின் அவசியம் கருதி நடிகை சந்தியா ஒரு அழுத்தமான லிப் டு லிப் முத்தக் காட்சியில் நடித்திருப்பதாகவும், அதை சென்சாரும் ஓகே செய்திருப்பதாகவும் கூறினார்.

இதனால் மேலும் பல முத்தக்காட்சி ஆஃபர்கள் சந்தியாவுக்குக் குவிந்துவிட்டனவாம். நிறைய இயக்குநர்கள் போன் போட்டு முத்தக் காட்சிக்கு நீங்க தயாரா? என்று நேரடியாகவே கேட்கிறார்களாம்.

இதனால் எரிச்சலடைந்த சந்திய, மஞ்சள் வெயில் படத்தில் முத்தக் காட்சியில் நடிக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சந்தியா அளித்த பேட்டி:

'மஞ்சள் வெயில்' படம் அழகான காதல் கதை. நான் காயத்ரி என்ற பெயரில் கல்லூரி மாணவியாக வருகிறேன். இந்தப் படத்தில் இதில் முத்தக் காட்சியில் நான் நடித்திருப்பதாக வந்த செய்தி பார்த்து அதிர்ந்தேன்.

கதாநாயகனை முத்தமிட்டு நடித்ததாக அவதூறு செய்தி பரப்பியுள்ளனர். விளம்பரத்துக்காக இயக்குனர் இதைச் செய்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. நான் அப்படி நடிக்கவில்லை. இனியும் நடிக்க மாட்டேன்.

சமீபத்தில் எனக்கொரு பட வாய்ப்பு வந்தது. அருமையான கதை. சிறந்த இயக்குனர். அதில் நடிக்கவே நானும் விரும்பினேன். ஆனால் அதில் லிப்டு லிப் முத்தக் காட்சி ஒன்று இருப்பதாக இயக்குநர் சொன்னார். அக்காட்சி அவசியம் என்றும் நான் அப்படி நடிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார். அதெல்லாம் முடியாது என்று கூறி, அந்தப் பட வாய்ப்பையே உதறிவிட்டவள் நான்...", என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X