மூஞ்சில சாணி அடிக்கிறாய்ங்க- தருண்கோபி

திமிரு, காளை என இரு படங்களை இயக்கியவர் இந்த தருண்கோபி. சமீப காலமாக தனது படங்களில் நடித்த சிம்பு மற்றும் விஷாலை கடுமையாக விமர்சித்து வந்தார்.
இவர் முக்கியப் பாத்திரத்தில் நடித்த மாயாண்டி குடும்பத்தார் எனும் படம் சமீபத்தில் வெளியானது. படம் குறித்து பரபரப்பாக ஏதாவது சொன்னால்தான் பிக்கப் ஆகும் என்பதால், நிருபர்களைச் சந்தித்த தருண் கோபி, வேண்டுமென்றே தனக்கு எதிராக சிலர் பிரச்சாரம் செய்வதாகக் குற்றம் சாட்டினார்.
ஆனால் அப்படிச் செய்பவர்கள் யார் என்பதை மட்டும் சொல்லவில்லை.
பின்னர் அவர் கூறுகையில், "இயக்குநர்கள்தான் நடிகர்களை உருவாக்குகிறார்கள். அதனால் இயக்குநர்களும் நல்ல நடிகர்களே என்பதை மெய்ப்பித்துள்ளது மாயாண்டி குடும்பத்தார்.
ஆனால் சிலர் என்மீதுள்ள பொறாமையில், நான் எங்கே பெரிய ஹீரோவாகிவிடுவேனோ என்ற கடுப்பில் என்னுடைய போஸ்டர்களில், மூஞ்சி மேலயே சாணியை அடிக்கிறார்கள். என் முகம் உள்ள அந்தப் பகுதியை மட்டும் கிழித்து எறிகிறார்கள்.
ஆனால் நான் ஓய மாட்டேன். அடுத்து 'காட்டுப் பய' என்ற படத்தில் நான்தான் ஹீரோ. அதற்கு முன்பு 'வாடி போடி' என்ற படத்தை இயக்குகிறேன். இதில் மட்டும் வேறு நாயகன் நடிப்பார், என்றார்.
நல்ல கருத்தாழமிக்க தலைப்பு... இப்படியே கன்டினியூ பண்ணுங்க... சினிமா வெளங்கீரும்!


Click it and Unblock the Notifications











