ஹீரோக்களுக்கு அம்மா வேடமா, ஆளவிடுங்க சாமி: தேவயானி
ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க மாட்டேன் என்று நடிகை தேவயானி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
பெரியதிரையைப் போன்றே சின்னத்திரையிலும் எனக்கு நல்ல வரவேற்புள்ளது. தற்போது நான் சீரியல்களில் பிசியாக உள்ளேன். படத்தில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வரத்தான் செய்கிறது. ஆனால் நடிக்க நேரமில்லை. சிலர் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க அழைத்தனர். அதற்கு நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன்.
நான் ஜோடியாக நடித்த ஹூரோக்களுக்கே அம்மாவாக நடிக்க அழைக்கிறார்கள். எனக்கொன்றும் அந்த அளவுக்கு வயதாகிவிடவில்லை. நான் 100 படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். எனது திறமைக்கு சவாலாக இருக்கும் கதாபாத்திரங்களில் மட்டும் தான் இனி நடிப்பேன்.
எனது கணவர் ராஜ்குமாரன் இயக்கி வரும் படம் ஒன்றில் அத்தகைய சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன் என்றார்.
Comments


Click it and Unblock the Notifications